Monday, 10 February 2025

கந்தனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம அறிவியல் திருவிழா!

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வானவில் மன்ற கருத்தாளர்களால் கிராம அறிவியல் திருவிழா அணைகட்டு வட்டம் கந்தனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே காலை 10:00 மணியளவில் நடைபெற்றது. 
கந்தனேரி ஊராட்சி மன்ற தலைவர் கே.எ.தங்கவேல் தலைமை தாங்கினார். முன்னதாக வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன் அறிமுக உரையாற்றினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் மாவட்ட கவுன்சிலர் எஸ்.ராகப்பிரியா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.ஜெயந்தி பரிசுகளை வழங்கி பேசினார்.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி, மாவட்ட உதவித் திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ கந்தனேரி கிராமத்தினை தேர்வு செய்து அந்த கிராமத்தில் உள்ளவர்களிடையே அறிவியல் பரிசோதனை அறிவியல் சிந்தனைகள் கருத்துகள் மற்றும் கிராமத்திலுள்ள மாணவர்கள் சிறப்பாக கல்வி பெறும் வாய்பு குறித்து கலந்துரையாடள் நடத்தி அறிவியல் பரிசோதனைகளையும் செய்து காட்டி செயல் விளக்கம் அளித்தனர். முடிவில் வானவில் மன்ற கருத்தாளர் வினோத் நன்றி கூறினார்.

பின்னர் மாவட்ட நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பே.அமுதா தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைத்தலைவர் கே.விசுவநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் வேலை அறிக்கை சமர்பித்து பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் கே.செந்தமிழ்செல்வன், முத்து, சிலுப்பன், ப.சேகர், பெ.ராமு, அ.பாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட பொருளாளர் வீ.குமரன் நன்றி கூறினார்.
 


No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...