Tuesday, 11 February 2025
தைப்பூசத்தை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது வழங்கப்பட்டது. தைப்பூசம் என்பது முருகனுக்கு அன்னை பார்வதி வேல் வழங்கிய நாள் தைப்பூசமாக நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைப்பூச நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று
தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment