வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர்கள். கண்டும் காணாமல் இருக்கும். போலீசாருக்கு மாதாமாதம் மாமூல் கொடுக்கும் அவலம் நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம், மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்று என்றே சொல்லலாம். சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள மாநகராட்சி வேலூர் மாநகராட்சி. இங்கே தங்கக் கோயில் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வேலூர் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆரணி சாலையில் ஏவிபி லாட்ஜ் அமைந்துள்ளது. இந்த லாட்ஜில் 24 மணி நேரமும் இடைவிடாது விபச்சாரம் நடக்கிறது. குறிப்பாக பட்டப்பகலில் தைரியமாக இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் விபச்சார அழகிகளை அழைத்துச் செல்வதும் இந்த லாட்ஜில் அறை எடுத்து தங்கி அவர்களுடன் இருந்து விட்டு பொழுதை கழித்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் சிலர். இந்த விபச்சார அழகிகளை அழைத்துச் செல்லும்போது பணத்தை பறித்துக்கொண்டு போலீஸ் சென்று கூச்சலிட்டு அந்த நபரை விரட்டி அடித்து விட்டு பணத்தை பறிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் சில விபச்சார அழகிகள் என்று சொன்னால் அது மிகை ஆகாது இப்படி பகல் கொள்ளை நடந்து வருகிறது இதை வெளியில் சொல்ல முடியாமல் பல இளைஞர்கள் தவிர்த்து வருகின்றனர்.
பாகாயம் காவல் ஆய்வாளர் முதல், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் முதல் நிலை காவலர்கள் இரண்டாம் நிலை காவலர்கள் என்று அனைவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மாமூல் வாரி வழங்கப்படுகிறது. இந்த லாட்ஜில் ஏவிபி லாட்ஜ் என்றால் விபச்சாரத்தில் கொடிக்கட்டி பறக்கும் நிலை உள்ளது. இது ஆரணி சாலையில் உள்ளதால் சத்தமின்றி தொழில் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் வேலூர் சரக டிஐஜி தேவராணி ஆகியோர் இந்த ஏவிபி லாட்ஜை உன்னிப்பாக கண்காணித்து இதில் நடைபெறும் விபச்சாரத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இல்லையெனில் அப்பாவி இளைஞர்களை குறி வைத்து அவர்களிடம் இருந்து பணம் பட்டப்பகலில் கூட பறிக்கப்பட்டு வருவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும் விபச்சார அழகிகளால் பாதிக்கப்படும் இளைஞர்களும். வேலூர் மாவட்ட காவல்துறை இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment