தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகளிலுள்ள அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம்.,ஐ.ஏ.எஸ், எச்சரிக்கை விடுத்தது சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு , அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையானது அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும். கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் ஆகியவை மனுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்’’ என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும். ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட முக்கிய அரசு துறைகளில் குறிப்பாக வருவாய்த்துறை அலுவலகங்களில் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சான்றுகளைப் பெறுவதற்கு கையூட்டு வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது.
மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தார்.
அதே போல் சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதை அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டு பட்டா வாங்க, நிலத்தை அளக்க, பட்டா பெயர் மாற்றம் செய்ய மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர், சர்வயேர், தாசில்தார் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும். என்ன தான் ஆன்லைனில் அப்ளை செய்தாலும், நிலத்தை அளக்க வரும் சர்வேயர் தொடங்கி, விஏஓ, தாசில்தார் ஆகியோரிடம் லஞ்சம் கொடுக்காமல் பல சான்றிதழ்களும், நிலத்தை அளந்து பட்டா பெறுவதும் எளிதானதாக இல்லை என்று பலர் குற்றம்சாட்டுகிறார்கள். பத்திரப்பதிவு செய்த உடன நிலத்தை அளக்க வரும் சர்வேயர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுக்க கணிசமான பணம் கேட்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்..
சேலம் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளராக 2023 மே 22) பொறுப்பேற்றுக் கொண்டு பேசியபோது திருப்பூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என கிறிஸ்துராஜ் .,ஐ.ஏ.எஸ், கூறினார். ஆனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகிய திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளர் கிறிஸ்தவராஜிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தான் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் லஞ்ச ஊழல் முறைகேடு கொடிகட்டி திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு புறம்போக்கு இடங்களுக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு தனி நபர்களுக்கு திருப்பூர் வடக்கு தனி வட்டாட்சியர் சட்ட விரோதமாக பட்டா வழங்கியுள்ளதாகவும். ஆனால் சாமானிய ஏழை எளிய மக்கள் பட்டா கேட்டு மனு கொடுத்தால் அந்த மனுக்களுக்கு மீதான ரசீது கொடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் என்ற ஒரு பெண்மணி நமது நிருபரை சந்தித்து நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.. வசூலில் எப்பொழுதும் கில்லியாக இருக்கும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் திருப்பூர் நகர் சர்வேயர் எந்த ஒரு இடத்திற்கும் சப்-டிவிஷன் பண்ண இவ்வளவு கூட்டு பட்டா பண்ண இவ்வளவு வார்டு நம்பர் வேண்டுமா? டி .எஸ் .நம்பர் வேண்டுமா இவ்வளவு? பிளாக் நம்பர் வேண்டுமா இவ்வளவு? என்று தினம்தோறும் வருகை தரும் பொதுமக்களிடம் கேட்டு வரும் நகர் நில அளவையர் வசூலில் எப்பொழுதும் கில்லியாக இருக்கும் வடக்கு ஆபீஸர் ஆளும் கட்சிகார்கிட்டயேகையை நீட்டிருக்காரு.. ஆபீசர்
என்ன மேட்டருக்கா ஆளுங்கட்சி கவுன்சிலரின் உறவினர் ஒருவர் தன்னுடைய இடத்தை அளவீடு செய்து சப்- டிவிஷன் செய்ய வடக்கால உள்ள அதிகாரியை
அணுகியிருக்காரு அவரு, வேலையை முடிக்க 3 லட்சம் கேட்டு இருக்காரு கடைசியாக 60 ஆயிரம் வாங்கிட்டு வேலையை முடிச்சு கொடுத்துட்டாரு அதற்கான ஆவணத்தை கேட்டால் இன்னும் ரூபா 50 ஆயிரம் வேணும்னு கண்டிஷன் போட்டு இருக்காரு எதற்கு மீதி மீண்டும் தொகை என்று கேட்ட பொழுது எனக்குப் பின்னால் தாசில்தார் ஹெச் ,எஸ், எனது உதவியாளர் என மூன்று நபர்கள் உள்ளனர். என கூறியவுடன் இந்த விஷயம் தெரிஞ்சு ஆளுங்கட்சி கவுன்சிலர், இரண்டாம் மண்டல தலைவர், உயர் அதிகாரி கிட்ட இந்த விஷயத்தை கொண்டு போய் இருக்காரு உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட அதிகாரியை மாற்றாமல் சிறிய தொகை வாங்கிக் கொண்டிருக்கும் உதவியாளரை மடத்துக்குளம் தாலுகாவிற்கு மாற்றப்பட்டார். பெரிய தொகை வாங்கிக் கொண்டிருக்கும் அதிகாரியை மீண்டும் பணி செய்யுமாறு கூறிவிட்டார். தினம்தோறும் வீட்டிற்கு செல்லும் பொழுது ரூபாய் 50,000 இல்லாமல் செல்வது கிடையாது இவங்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்குது
தினசரி 50,000 வீட்டிற்கு கொண்டு சென்றால் தான் இவர்களுக்கு தூக்கம் வரும் போல் தெரிகிறது...
ஆளும் கட்சிக்காரர்கிட்டயே இவ்வளவு தைரியமா வாங்கிற அதிகாரி பொதுமக்கள் கிட்ட எப்படி எல்லாம் வசூல் பண்ணுவாங்கன்னு கஷ்டமா தான் இருக்கு
சில வருடங்களாக கிராமப் பகுதியில் சர்வேராக பணிபுரிந்து வந்த எப்போதும் கில்லியாக வசூலில் ஈடுபட்டு வரும் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியாளர் ஒரு சிலர் செய்கின்ற தவறால் ஒட்டுமொத்த அரசு துறை அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர் தான் உண்டாகி கொண்டு இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் வடக்கு அதிகாரிடம் விசாரணை செய்து லஞ்சப் பணத்தில் எவ்வளவு சேமிப்பு பணம் உள்ளது என்று கண்டுபிடிப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி
பொதுமக்கள் தங்களது சொந்த பணத்தில் வீடு வாங்கி
பட்டா மாறுதலுக்கு சென்றாள் அரசுத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு அலுவலர் சம்பளம் வாங்கிக் கொண்டு லஞ்ச பணத்தில் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்று மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுப்பாரா?
விதிகளை மீறுவதற்காகவே கையூட்டு கொடுப்போர், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக பொதுவெளியில் பேசுவதும் அதிகமாக நடக்கிறது. கையூட்டு கேட்பது எந்த அளவிற்கு குற்றமோ அதே போல் தான் கையூட்டு கொடுத்து விதிகளை மீறி காரியத்தை அரசு ஊழியர்கள் மூலம் காரியம் சாதிக்க நினைப்பதும் தவறாகும். நாம் விதிகளை மீறாமல் செயல்பட்டால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதுவரையில் லஞ்சம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. வசூல் வேட்டையில் கில்லி போல் சுற்றி வரும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் கண்டுகொள்ளாத திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது தமிழ்நாடு முதலமைச்சர்!?
No comments:
Post a Comment