Wednesday, 25 December 2024

ஏமாற்றுபவர்கள் பலவிதம் இது தனி விதம் ஆடிட்டிங் நிறுவனத்தில் ரூ 4 கோடியே 25 லட்சத்து 3 ஆயிரத்து 10 ஐ ஏ மாற்றிய கேடி சீதா மலர் மதி கைது!

திருவள்ளூர் மாவட்டம்,
வேப்பம்பட்டு திருநகர் பகுதியில் வசிப்பவர் அன்னை ஆடிட்பர்ம் என்ற பெயரில் ஆடிட்டர் மோகன் பாபு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களுக்கு அக்கௌன்ட் மற்றும் ஆடிட்டிங் ஜிஎஸ்டி பி.எப் மற்றும் ஐடீ பைலிங் தொழில் செய்து வருகிறார். அவருடைய நிறுவனத்திற்கு உதவியாளராக தென்காசியைச் சேர்ந்த வெற்றிவேல் என்கிற முருகன் என்பவர் 2015 ஆம் ஆண்டு வேலைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு மாத சம்பளமாக ரூபாய் 18000 மோகன் பாபு கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் வெற்றிவேல் முருகன் என்கிற முருகன் மனைவி சீதா மலர்மதி என்பவர் வேப்பம்பட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் பெருமாள் பட்டு ஸ்டாப் நர்ஸ் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். மோகன் பாபுவின் மனைவிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது பின் எட்டு மாத கருவாக இருக்கும் போது வயிற்றிலேயே இருக்கும்போது இறந்து விட்டதால் மோகன் பாபுவின் மனைவி உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் மோகன் பாபுவின் தொழிலில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. மோகன் பாபு தனது நம்பிக்கைக்கு உரிய உதவியாளர் வெற்றிவேல் என்கிற முருகன் என்பவரிடம் அவரது நம்பிக்கைக்கு உரிய வாடிக்கையாளர்களிடம் ஜிஎஸ்டி வரி கட்டுவதற்காக ஏதுவாக அவரது வங்கி கணக்கு எண் பாஸ்வோர்ட் மற்றும் ஜி.எஸ்.டி யு.எஸ்.ஆர்.ஐடி ஆகியவற்றை வேல்முருகன் என்கிற முருகனிடம் கொடுத்துள்ளார். ஜிஎஸ்டி வரி கட்டும்போது

வரும் பாஸ்வோர்ட் ஜி.எஸ்.டி போர் செல் பதிவு செய்ய வேண்டி உள்ளதால் otp வரும் மோகன் பாபுவின் மொபைல் போன் நம்பரையும் கொடுத்துள்ளார். மோகன் பாபு ஏமாற்றுத்தக்க தருணத்திற்காக காத்து கொண்டிருந்த வெற்றிவேல் என்கிற முருகனும் அவனது மனைவி சீதா மலர்மதியும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக வேண்டி அக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதம் 2020 ஆண்டு வரையிலான காலகட்ட த்தில் மோகன் பாபுவின் வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி வரி கட்டுவதற்காக அனுப்பிய பணத்தினை உரிய முறையில் ஜிஎஸ்டி வரி ரூபாய் 4 கோடியே 25 லட்சத்து 3ஆயிரத்து 10 ஐ வெற்றிவேல் என்கிற முருகன் அவரது மகன் ரிஜித்சாய்யின் பெயரில் வைப்பு நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தையும் அவரது மனைவி சீதா மலர்மதி மற்றும் அவரது படிப்பறிவு இல்லாத வறுமையிலுள்ள உறவினர்களுக்கு புதியதாக வங்கி கணக்கு துவக்கி வங்கி கணக்கு புத்தகம் ஏடிஎம் கார்டு ஆகியவற்றைத் தானே வைத்துக் கொண்டு அந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி பின் அதை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோகன் பாபுவை ஏமாற்றியுள்ளனர். வெற்றிவேல் என்கிற முருகன் மற்றும் சீதா மலர்மதி ஆகியோர் கூட்டு சேர்ந்து ஆடிட்டர் மோகன் பாபுவை ஏமாற்றியதால் சில வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரி அலுவலகத்தில் இருந்து ரைடு வந்து மோகன் பாபுவை விசாரணை செய்த பின் குற்றவாளிகள் ஏமாற்றிய விபரம் மோகன் பாபுவிற்கு தெரிய வந்தது. அதன் பிறகு வெற்றிவேல் என்கிற முருகன் தலைமறைவாகி தனது மனைவி சொந்த ஊரான தென்காசி அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதல் பெற்று சொந்த ஊரில் இருந்து உள்ளார். சீதா மலர்மதி கடந்த 15 நாட்களுக்கு முன்ப அரியலூர் அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணி மாறுதலில் சென்றுள்ளார். குற்றவாளி சீதா வளர்மதியை கைது செய்யுமாறு ஆவடி மாநகர காவல் துறை ஆணையாளர் சங்கரின் உத்தரவின் பேரில் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் குற்றவாளி சீதா மலர்மதியை தலைமறைவாக இருந்து வரை ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் வேலு கைது செய்து உள்ளார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...