மதுரை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்குவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்துள்ளன. இந் நிலையில் சம்பவத்தன்றும் ஏராளமான லஞ்சப்பணம் கைமாறியதாக தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர். அன்றாட நடவடிக்கைகளை கவனித்த அவர்கள், நீர்வளத்துறை வைகாசி இல்லத்தில், அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் அங்கு பணியில் இருந்த உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப் என்பவர் நிறைய பணம் வைத்திருப்பதை கண்டனர். அதற்கு முறையான கணக்குகள், ஆவணங்கள் இல்லை என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டனர். இதையடுத்து, சையது ஹபீப் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து எண்ணினர்.
மொத்தம் ரூ.1.11 லட்சம் இருந்தது. எந்தக்கணக்கிலும் வராத பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சையது ஹபீப்பை அடுத்தக்கட்ட விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment