Wednesday, 25 December 2024

பெண்கள், ஆண்களை விவாகரத்து.. (ஜீவனாம்சம்) என்ற பெயரில் திட்டமிட்டு பணம் பறிக்கவும் சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தக் கூடாது!

நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதையும், பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்ட பிறகு ஜீவனாம்சம் குறித்த விவாதத்தையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் விவாகரத்து தொடர்பாகவும்.. ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாகவும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி நாட்டில் கடுமையான சட்டங்கள் பெண்கள் நலனுக்காக உள்ளன. ஆனால் அந்த சட்டங்களை தங்களின் கணவர்களிடம் இருந்து பணம் பறிப்பதற்காக தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வு நடத்திய ஒரு விவாகரத்து வழக்கின் விசாரணையின் போது,​​​​ சட்டங்கள் ஆண்களை "கண்டிக்கவும், அச்சுறுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் அல்லது மிரட்டி பணம் பறிக்கவும்" இல்லை. எனவே பெண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான திருமண தகராறுகளில், பெண்கள் தங்கள் கணவர்களை பலாத்காரம், கிரிமினல் மிரட்டல் மற்றும் கொடுமை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இப்போதெல்லாம் இது திட்டமிட்டு செய்வது போல தெரிகிறது. திட்டமிட்டு வைக்கப்படும் புகார்கள் போல தெரிகிறது.

பெண்கள் தங்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்களின் நலனுக்கான நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும், தங்கள் கணவர்களை தண்டிக்கவோ, அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ அல்லது மிரட்டி பணம் பறிக்கவோ அல்ல.

குற்றவியல் சட்டத்தில் உள்ள விதிகள் பெண்களைப் பாதுகாப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் ஆகும், ஆனால் சிலர் தவறான நோக்கங்களுக்காக அவற்றை தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்து திருமணம் புனிதமானது, அது வணிக நோக்கத்திற்காக செய்யப்படும் ஒன்று அல்ல. எவ்வாறாயினும், பல சந்தர்ப்பங்களில் கடுமையான சட்டங்களை பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள செய்ய பெண்கள் இந்த சட்டத்தை தவறாக கையாளுகின்றனர் .

இதில் சில சமயங்களில் பெண்கள் விஷயம் என்பதால் காவல்துறையும் விரைந்து முடிவெடுக்கிறது, மேலும் கணவனை மட்டுமல்ல, அவனது குடும்ப உறுப்பினர்களையும், வயதானவர்களையும் கூட கைது செய்வது, மற்றும் விசாரணை செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்டுகின்றன. இது போன்ற விவரங்களில் சட்டங்களை நியாயமாக பயன்படுத்த வேண்டும்., என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதுல் சுபாஷ் வழக்கு: பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை போலீசார் கைது செய்தனர். அதோடு அவரின் அம்மா, தம்பியையும் கைது செய்தனர்.

என்ன நடந்தது?: அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார்.

மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார், ஆனால் கடைசியில் வரதட்சணைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். சுபாஷின் மனைவியின் தந்தை திருமணமான உடனேயே நோயால் இறந்தார், ஆனால் தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...