Sunday, 22 December 2024

திண்டுக்கல்லில் கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு!

திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் சாலை காட்டுமடம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி விஜயலெட்சுமி(60 வயது). இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறோம். கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 23ஆயிரம், விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் திருடு போய் இருந்தது.  
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை என்றபேரில் எங்களை அலைக்கழித்தனர். அதோடு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனம், அரசு ஜீப், இன்ஸ்பெக்டரின் காருக்கு பணம் தராமல் பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றனர். மேலும் குற்றவாளிகளை தேடி செல்வதாக வாகன ஏற்பாடு செய்வதற்கு பணம் வாங்கினர். 

இந்தநிலையில் எங்கள் வீட்டில் திருடிய நபரை கைது செய்ததை அறிந்து காவல் நிலையம் சென்று கேட்டோம். அப்போது 25 பவுன் நகைகள் மட்டும் தான் தரமுடியும் என்றும், மீதமுள்ள நகைகள் கவரிங் நகைகள் என்று கூறிவிட்டனர். 

திருடு போயிருந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பெரும் தொகையை லஞ்சமாக தர வேண்டும் என திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவலர் வினோத் மூலம் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் கருப்பையாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றவாளியை போலீஸ் கைது செய்த தகவல் அறிந்து கருப்பையா, காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது 25 சவரன் நகைகள் மட்டும் திரும்ப கொடுத்துள்ளனர். மீதி நகை, பணம், கைகடிகாரத்திற்கு சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி,

கருப்பையா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, சிவகங்கை சைபர் கிரைம் CDR , Cyber Crime Inspector -ஆக பணிபுரியும் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, போலீஸ்காரர் வினோத் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...