அகில உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான ரோம் அலுவலகத்தில் இருந்து தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கத்தோலிக்க மறைமாவட்டத்தின் 7-வது ஆயராக அம்புரோஸ் பிச்சைமுத்து என்பவரை நியமனம் செய்துள்ளார். அவருக்கு நேற்று பிரம்மாண்ட (திருநிலைப்பாட்டு) அபிஷேக விழா நடந்தது. முன்னதாக மாலை 4.30 மணி அளவில் ஆயர் இல்லத்தில் இருந்து குருக்கள், கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து வேலூர் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் அபிஷேக பெருவிழா நடந்தது. அவருக்கு கும்ப மரியாதை செய்யப்பட்டது.
இந்த விழாவுக்கு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் மற்றும் திருநிலைப்படுத்தும் முதன்மை ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கினார்.
செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன், கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஆகிய இணை ஆயர்கள் முன்னிலை வகித்தனர்.
வேலூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பரிபாலகரும், நிர்வாகியுமான ஐ.ஜான்ராபர்ட் வரவேற்றார்.
சென்னை-மயிலை முன்னாள் ஆயர் சின்னப்பா உள்ளிட்ட ஆயர்கள் பலர் வாழ்த்தி பேசினர். விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, வேலூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு பாதிரியார் ஜேம்ஸ், ஒருங்கிணைப்பாளர் பேட்ரிக் மற்றும் இராசுலூயி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த குருக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட குருக்கள் இந்தியா அளவில் 40 ஆயர்கள், முதன்மை குருக்கள், இருபால் துறவிகள், கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment