Sunday, 22 December 2024

செங்கல்பட்டில் ரேஷன் அரிசி கடத்தல் வியாபாரிகளுடன் கைகோர்த்து பல லட்சம் ஈட்டும் 32 நியாய விலை கடைகளின் மேலாளர் சரவணனின் செயலுக்கு அரசு கடிவாளம் போடுமா!?

தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் 18005995950 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன.

தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர்J. ராதாகிருஷ்ணன்., ஐ.ஏ.எஸ், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சிப் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த (நவம்பர் 6 தேதியன்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அரிசிக் கடத்தலைத் தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை அதிகாரி (டிஜிபி) சீமா அகர்வால் ., ஐ.பி.எஸ், தலைமையில் 500 பேர் கொண்ட குழுவினர் பணியிலுள்ளனர்.
அந்தக் குழுவின் நடவடிக்கை காரணமாக கேரள மாநிலத்தின் 13 எல்லையோர மாவட்டங்கள், ஆந்திர மாநில வேலூர் மாவட்டம், காட்பாடி கிருஷ்டன்பேட்டை எல்லைப் பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அரிசிக் கடத்தலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. “தமிழ்நாடு முழுவதும் உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 9,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28,802 குவின்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. “கைதானவர்களில் 72 பேர்மீது பிணையில் வெளிவரமுடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைவர் டாக்டர். J.ராதாகிருஷ்ணன்., ஐ.ஏ.எஸ், கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் ரேஷன் அரிசி கடத்தல் வியாபாரிகளுடன் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள
ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் செங்கல்பட்டு சரகத்திற்குட்பட்ட மொத்தம் 32 நியாய விலைக் கடைகள் இருக்கிறது. இந்த 32 நியாய விலைக் கடைகள் அனைத்திற்கும் செங்கல்பட்டு சரக மேலாளராக பணிபுரிந்து வருபவர் தான் உத்திரமேரூர் சேர்ந்த சரவணன் இவர் 2013 ஆம் ஆண்டு சாதாரண விற்பனை உதவியாளராக பணியில் சேர்ந்தவர்தான் இந்த சரவணன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் சரக மேலாளராக பணி உயர்வு பெற்றதுதான் இவரது அசுர வளர்ச்சி!!! ஆரம்ப கட்டத்தில் சாதாரண விற்பனை உதவியாளராக பணியை துவக்கிய சரவணன் வருமானம் வரக்கூடிய பல்வேறு முறைகேடான வழிமுறைகளை ஏற்படுத்தி கொண்டாராம். அவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 32 நியாய விலைக் கடைகளும் இவருக்கு மாதம் தலா ரூபாய் 1000 வீதம் தவறாமல் கப்பம் கட்ட வேண்டுமாம். இவருடைய அட்ராசிட்டியை சமாளிக்க முடியாமல் புலம்பி தவிக்கிறார்களாம் சேல்ஸ்மேன்கள். சரவணனிடம் மாதாமாதம் ஏன்பணம் கொடுக்க வேண்டும் என்று ஏன் எதற்கு என கேள்வி கேட்கும் விற்பனையாளர்களை தனக்கு நெருக்கமான அதிகாரிகளை கொண்டு கடைகளுக்கு ரெய்டு பார்ப்பது இவரது வாடிக்கையாக வைத்திருக்கிறாரம் . அப்படி அதிகாரிகள் ரெய்டு செல்லும் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை கணக்குகள் சரியாக இருந்தாலும்!!!… அந்த கடை விற்பனையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் அபராதம் போடுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. என விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனராம். இது ஒருபுறம்.. காஞ்சிபுரம் மாவட்ட பண்டக சாலைக்குட்பட்ட கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களின் பணியிட மாறுதலுக்கு ரூபாய் 30,000 முதல் 50,000 வரை வசூல் செய்கிறார் என்பதும் விற்பனையாளர்களின் முதன்மையான குற்றச்சாட்டாக உள்ளதாம். இந்தத் தொகை மேல் அதிகாரிகளை சரி கட்டுவதற்கும் உணவு பாதுகாப்பு போலீஸ் துறைக்கும் போய் சேர்வதாக சரவணனே கூறுவதாகவும் எழுச்சித் தகவலை கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.. இந்த இட மாறுதலுக்கு பெறும் தொகை யாரிடம் தான் போய் சேருகிறது என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் மேலும் மாதாந்திர வசூல் தொகை மற்றும் பணியிட மாறுதலுக்கான தொகை போன்றவைகளில் பெண் விற்பனையாளர்களுக்கு மட்டும் சில தளர்வுகளும் உண்டாம். ஏனென்றால் சரக மேலாளர் சரவணன் பெண் விற்பனையாளர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பாராம் . சில பெண் விற்பனையாளர்களை அவர் கண்டு கொள்ள மாட்டாராம் . ஏன் என்பது பற்றி சரவணனுக்கு நெருக்கமாக உள்ள பெண் விற்பனையாளர்கள் தான் கூறவேண்டும். சரவணனிடம் தள்ளியே இருக்கும் பெண் விற்பனையாளர்களை வழக்கம்போல் அவரது பாணியில் ரெய்டு மற்றும் அபராதம் என டார்ச்சர் மேல் டார்ச்சர் தானாம். மேலும் அதிகாரிகளை வைத்து தொல்லை கொடுப்பாராம். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சரவணனின் மேலும் ஒரு ஹை லைட்டான விஷயம் என்னவென்றால் இவர் செய்யும் அனைத்து தில்லுமுல்லு வேலைகளுக்கும் தளபதியாக இருப்பது பிவி களத்தூரைச் சேர்ந்த பிரபல ரேஷன் அரிசி வியாபாரி சத்யா தான்… சரவணன் தான் சரக மேலாளர் என்றாலும் சத்யா தான் நிழல் மேலாளராக செயல்பட்டு வருவதாகவும் பரவலான பேச்சு அடிபடுகிறதாம் ரேசன் கடை ஏரியாவில்!!! செங்கல்பட்டு நகரில் இயங்கி வரும் ரேஷன் கடைகளின் விற்பனை விவரம் மற்றும் விற்பனைத் தொகை ஆகியவற்றை வசூல் செய்வது கணக்கு வழக்கு பார்ப்பது போன்றவை எல்லாமே சரவணனுக்கு சத்யாதான் என்ற தகவலும் ரெக்கைகட்டி பறப்பதாகவும் கூறுகின்றர். மேலும் ஒரு கடைக்கு இத்தனை அரிசி மூட்டை என செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதாமாதம் மொத்தமாக அரிசி மூட்டைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேகரித்து அவற்றை மொத்தமாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தி விற்பனை செய்வதாகவும் ஒரு செய்தி உலாவருகிறது என்ற தகவலும் நம்காதில் போட்டனர் சமூக ஆர்வலர்கள். இந்தக் கடத்தல் மற்றும் முறைகேடு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட பண்டக சாலையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் முருகானந்தம் அவர்களின் கவனத்திற்கு தொலைபேசி வாயிலாகவும் புகார்கள் வாயிலாகவும் பலமுறை தெரிவித்துள்ளதாகவும் ஆனால் ஏனோ நடவடிக்கை மட்டும் எடுத்ததாக தெரியவில்லை என புலம்புகின்றர்.. அவரிடம் புகார் கூறி எந்தப் பயனும் இல்லை எனவும் தகவல் கூறுகின்றர். மேலும் ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகைக்கு கூட்டுறவு பண்டக சாலையின் சார்பில் செயல்படும் பட்டாசு கடைகளில் வெளிமார்க்கெட்டில் பட்டாசுகளை கொண்டு வந்து இறக்கி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டுவதும் இவர்களின் வருடாந்திர சீசன் வருமானமாம்.
எது எப்படியோ இது போன்ற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு அரிசி கடத்தல் தொழிலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வரும் சரக மேலாளர் சரவணனை தற்போது காஞ்சிபுரம் பண்டக சாலையின் நிர்வாக இயக்குனராக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் சிவகுமார் அவர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட குற்றச்சாட்டு உறுதியானால் சரக மேளாலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! 
அல்லது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைவர் டாக்டர். J.ராதாகிருஷ்ணன், I.A.S., அவர்களும், தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்,
வேளாண் உற்பத்தி ஆணையாளர், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் அபூர்வா, I.A.S., அவர்களும் சரவணன் மீது விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!!! புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாக இயக்குனர் சிவகுமார் நேர்மைக்கும் நீதிக்கும் அரசு விதிகளுக்கும் ஒருபோதம் புறம்பாக செயல்பட்டவர் இல்லை மேலும் அவர் கண்டிப்பு பெயர் போனவர் தகவல் கிடைத்துள்ளது. எனவே பல குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சரக மேலாளர் சரவணன் மீது நிச்சயம் பாரபட்ச விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.. பொதுமக்களின் நம்பிக்கை வீண் போகாது என்பதும் வரும் காலங்களில் தெரியவரும்!!!

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...