Monday, 16 December 2024

ராஜஸ்தானில் நடந்த தேசிய அளவிலான 11 வது வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பரிசுகளை குவித்த குடியாத்தம் பள்ளி மாணவர்கள்!

தேசிய அளவிலான 11வது பஞ்சாயத்து யுவ கிருடா கேல் அபியான் சார்பில் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி" 2024 ராஜஸ்தான்  மாநிலம்  புகானாவில் கடந்த"08.12.2024 அன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 மாநிலங்களில் இருந்து 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக 98 பேர் கலந்து கொண்டனர், இதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆசிர்வாத் இண்டர்நேஷ்னல் சீனியர் செகண்டரி பள்ளியைச் சார்ந்த 7 மாணவ−மாணவிகள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 1.Sai srinik 

Krishna (gold)
2.Tashyan (silver )
3.Dhooshinee (gold)
4.sarini (gold)
5.sanjana (gold)
6.Devanath (silver)
7.Natheesh (silver)
 இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆசிய பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சந்தீப் செளத்ரி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமியிடம்  நேரில் மாணவர்களுடன் சென்று தெரிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பள்ளியின் தாளாளர்  மஞ்சுநாத் மற்றும் பள்ளியின் முதல்வர் பிரமிளா கண்ணன் ஆகியோருடன் உடற்கல்வி இயக்குநர் விஜயன் மற்றும் பயிற்சியாளர் சாரதி ஆகியோரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...