வேலூர் மாநகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 37 -வது நினைவுநாளை முன்னிட்டு காட்பாடி ஓடைப்பிள்ளையார்கோயில் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், வேலூர் பழைய மாநகராட்சி கட்டட வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் வேலூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் தருமலிங்கம், மாநில எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராஜா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் பி.கே.ஆர்.சதீஷ்குமார், காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் பாபு, மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார், காட்பாடி பகுதி செயலாளர்கள் கௌதம், டைலர் ரவி, சக்திவேல், வேலூர் பகுதி கழகச் செயலாளர்கள் விஜயராஜன், சோமு, மற்றும் சத்தியமூர்த்தி, கோரந்தாங்கல் ஐஸ் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment