கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கலைஞரின் நூற்றாண்டு முப்பெரும் விழா நிறைவு நாளினை முன்னிட்டு 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேங்காய் பழம் வெத்தலை பாக்கு புடவை மஞ்சள் குங்குமம் அச்சு வெல்லம் உள்ளிட்டவை 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கி வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் ஆரா. சக்கரபாணி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ. மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா. மாநகர சுகாதார குழு தலைவர் என் எஸ் மாதேஸ்வரன். வேப்பனப்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன். சுகுமாரன். சீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
வரம் மருத்துவமனை இயக்குனர் அனைவரையும் வரவேற்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியானது கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் பார்த்து ரசிக்கக்கூடிய அளவிற்கு பட்டிமன்றம் நடைபெற்றது அதேபோன்று மதியம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment