வேலூர் மாவட்டம், காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலி சிறப்பு கூட்டத்தில் தூய நற்கருணை நாதர் திருத்தலத்தின் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவை ஜெபித்தனர். தூய நற்கருணை நாதர் திருத்தலத்தின் பங்கு தந்தைகள் சுந்தர் பிரான்சிஸ், மார்ட்டின், விண்ணரசு ஆகியோர் திருப்பலியை நிகழ்த்தினர். இந்த திருப்பலியில் பாவ சங்கீர்த்தனம் இசைக்கப்பட்டது. அருட் சகோதரிகள் மற்றும் ஞானசேகர், போஸ்கோ ,டேவிட், ஜாக்சன் ஆகியோர் பாடல் குழுவில் இணைந்து திருப்பலி பாடல்களை பாடினர். எட்வின் மரியரசு திருப்பலியை நிறைவேற்றினார். இந்த திருப்பலியில் தூய நற்கருணை நாதர் திருத்தலத்தின் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதை தொடர்ந்து அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பங்கு தந்தைகள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!
பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment