Tuesday, 24 December 2024

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின்மாதாந்திர நாட்காட்டியினை வேலூர் RDO வெளியிட்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின்  மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும்  சங்கத்தின் 2025ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாள்காட்டி வெளியீட்டு விழா சங்கத்தின் தலைவரும் வேலூர்  வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது.   
முன்னதாக அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். 

அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, இரா.சீனிவாசன்,   பொருளார் வி.பழனி,  ருக்ஜி.ராஜேஸ்குமார், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்  டாக்டர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், பி.என்.ராமச்சந்திரன், எ.ஶ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

பின்னர் 2025ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன் வெளியிட அதனை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.   
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2025ஆம் ஆண்டிற்கான வருடாந்திர செயல்பாடுகளை வடிவமைத்து உலக ரெட்கிராஸ் தினம், ரெட்கிராஸ் நிறுவனர் தினம், ஜெனிவா ஒப்பந்த தினம், சர்வதேச இரத்த கொடையாளர்கள் தினம், உலக பெண்கள் தினம், உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பொங்கல்விழா  சிறப்பாக நடத்துவது என்றும் இவ்விழாவில் கடந்த ஆண்டில்  சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...