தமிழ்நாடு அரசு அனைத்துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் மாநில தலைவர் டாக்டர் பி. பாஸ்கர் தலைமையில் நடந்தது. மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு, மாநில பொதுச் செயலாளர் பி. பாலாஜி சிங் மற்றும் சட்ட ஆலோசகர் ஜி. பிரபாகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் டி .கே. ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் சி. ராஜவேலு தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசிடம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில தலைவர் தலைமையில் சென்னை சென்று முதல்வரின் சிறப்பு செயலர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் மற்றும் இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த மாநில பொதுக்குழுவில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர், மாநில பொருளாளர் எஸ். ரவிக்குமார், மாநில கௌரவ தலைவர் பி.ஜோதிராமலிங்கம், மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாவட்ட பொருளாளர் எ. மணி, மாவட்ட துணைச் செயலாளர் முனுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கௌரவ தலைவர்கள் ஆர். சம்பத், தாண்டவமூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் மதன்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தோட்டக்கலை பண்ணை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அறிவழகன், சிவகங்கை மாவட்டம் சின்னத்தம்பி, தென்காசி மாவட்டம் சங்கர், தஞ்சாவூர் மாவட்டம் செந்தில், புதுக்கோட்டை மாவட்டம் சோலையப்பன், நீலகிரி மாவட்டம் செல்வம், கரூர் மாவட்டம் மூக்கன், கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமாள், காஞ்சனா, கடலூர் மாவட்டம் ரங்கநாதன், செங்கல்பட்டு மாவட்டம் அருள்தாஸ், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ரத்தினம், சேலம் மாவட்டம் மாதேஸ்வரி, தீர்த்தம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து இணைப்பு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழக அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய தமிழக அரசை இந்த பொதுக்குழு வேண்டுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு முன்பு போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இந்த பொதுக்குழு வேண்டுகிறது. நிலுவையிலுள்ள சரண்டர் விடுப்பு மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு இனிவரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் அதே தேதியில் மாநில அரசும் அகவிலைப்படி மாநில தலைவர் மாநில பொதுச்செயலாளருக்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கிறது தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்ட அரசாணை எண் 139 நாள் 3.10.2022 இன் படி தமிழக முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் இனி அனைத்து காலிப் பணியிடங்களையும் மற்றும் இனி ஏற்பட போகின்ற காலி பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணி அமர்த்தும் படி வந்த அரசாணையை திரும்பப் பெற இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது . தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, பதவி உயர்வு, குடும்ப நிதி வழங்க இந்த பொதுக்குழு தமிழக அரசை வேண்டுகிறது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களுக்கு பணி நிறைந்தரம் செய்ய இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழக அரசிஅஅல் காலியாக உள்ள சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு தினக்கூலியாக மாவட்டங்களை ஒருவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளது எனவே தனித்தனியாக மாவட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். வேலூர் போன்ற மாநகராட்சிகளில் மாநகராட்சியாக மாற்றப்பட்டாலும் அரசு பணியாளர்களுக்கு அதற்கு ஈடான வீட்டு வாடகை படி மற்றும் சி சி ஏ வழங்க பரிந்துரைக்கும் படி இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் துணை செயலாளர்களை சந்திக்க தேதி வழங்கியவுடன் மாநில நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேண்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்திலுள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் மாவட்ட நிர்வாகி ஜெயபால் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment