Friday, 13 December 2024

பேரணாம்பட்டு போன் மில் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் கொழுப்பு கம்பெனிகள்: கண்டு கொள்ளாத மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு போன் மில் பகுதியில் உரிமம் பெறாமல் ஒரு சில கொழுப்பு கம்பெனிகள் பல வருடங்களாக இயங்கி வருகின்றது. உரிமம் பெற்ற கொழுப்பு கம்பெனிகளே அடுப்புகளை விறகால் எரிய விட வேண்டும் என்பது சட்டம். ஆனால் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் ஒரு சில கொழுப்பு. 

கம்பெனிகள் விறகுக்கு பதிலாக மாட்டு கழிவுகளான சூரா, ஜவ்வு. போன்றவைகளால் அடுப்புகளை எரியவிட்டு மாசு ஏற்படுத்துகின்றன.  இதனால் அப்பகுதியில் வாழும் குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த தொந்தரவாக இருப்பதாக அந்த பகுதி வாழ் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதையல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசனுக்கு மாதாமாதம் கொழுப்பு கம்பெனி நடத்துபவர் சார்பாக கப்பம் சென்று சேர்வதாக  சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் உரிமம் இல்லாமல் கொழுப்பு கம்பெனி நடத்தும் சிவராஜ் நகரைச் சேர்ந்த சுதாகர் பேரணாம்பட்டைச் சேர்ந்த இலியாஸ் ஆகியர்கள் மீது மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அத்திப்பட்டு கிராமம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பேரணாம்பட்டைச் சேர்ந்த ஹமீம். என்பவர் உரிமம் பெறாமல் தலைச்சக்கை கம்பெனி நடத்தி வருவதால் இங்கிருந்து வெளிவரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் அத்திப்பட்டு கிராம மக்களுக்கு பெருந்தொல்லைகளும், தொந்தரவுகளும் சென்று சேர்வதாகவும் இது குறித்து வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன். நேரில் ஆய்வு செய்து சுதாகர். மீதும், அமீன் மீதும் ,இலியாஸ். மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...