Sunday, 15 December 2024

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அமலோற்பவ அன்னை ஆலயத்தில் சிறப்பு ஆராதனை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை டெல் வெடிமருந்து தொழிற்சாலை அருகில் மலையில் அமலோற்பவ அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கி.பி. 1810ஆம் ஆண்டு கெபி கோயிலாக உருவானது.  பின்னர் நாளடைவில் இந்த ஆலயம் தேவாலயமாக உருவானது. இதனை இங்குள்ள முக்கிய பிரமுகர்கள் நிர்வகித்து வருகின்றனர். 

இந்த அமலோற்பவ அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆராதனை, கூட்டு திருப்பலி நடைபெறுவது வழக்கம் .இதை தொடர்ந்து இரவு சிற்றுண்டி வழங்கப்படும். இதே போன்று 14ம் தேதி மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆராதனை நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ளதால் கிறிஸ்டியான் பேட்டை பங்குத்தந்தை எட்வின் சவரியப்பா சிறப்பு கூட்டுத் திருப்பலியினை நடத்தி வைத்தார். ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர். இறுதியாக அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு ஆராதனைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிறிஸ்டியான் பேட்டையைச் சார்ந்த தொழிலதிபரும், மெட்டுக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான நம்பிக்கைராஜ் விமரிசையாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...