Monday, 30 December 2024

வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்ற 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் "யார் அந்த சார்?’ வேலூரில் அதிமுகவினர் கோஷங்களை முழக்கங்களையும் எழுப்பினர். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் 'யார் அந்த சார்?' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 'மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த போது, ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும்' அந்த மாணவி புகாரில் தெரிவித்து உள்ளார். 

அந்த சார் யார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் காவல் துறை உயர் அதிகாரி, பாலியல் வன்கொடுமை செய்தது ஞானசேகரன் மட்டும் தான் என்கிறார். 

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்மந்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்தவர்,

ஞானசேகரன் தி.மு.க வை சேர்ந்தவராக இருப்பதாக தகவல் வருவதாகவும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டவுடன், அவர் பெயர் இடம்பெற்ற பேனர்கள், நோட்டீஸ்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும் போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களை தப்பிக்க வைக்க இந்த காவல்துறை செயல்படுகிறதோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருந்தார். 

அதிமுக சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் 

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பொழுது, 

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் காவல் துறை வாகனம் மூலம் கைது செய்ய முயன்ற பொழுது சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற அதிமுகவினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...