வேலூர் ஸ்ரீபுரத்திலுள்ள நாராயணி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள திட்டம் - 49 குழந்தையில்லா தம்பதிகளுக்கு கருத்தரிப்பு சிகிச்சை இலவசமாக அளிக்கும் திட்டத்தை அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், அரியூரிலுள்ள ஸ்ரீநாராயணி தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மாவின் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சக்தியம்மாவின் 49 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு 49 குழந்தையில்லா தம்பதிகளுக்கு கருத்தரிப்பு சிகிச்சை ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை இலவசமாக அளிக்க அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், துவங்கி வைத்தார் இதில் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் இதில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மு.பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இணியன், துணை கண்காணிப்பாளர் டாக்டர் சக்திவேல், இணை இயக்குனர்கள் சீனா ஸ்ரீகாந்த், டிரைன்ஸ் சுகி அகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தையின்மைக்கான கருத்தரிப்பு சிகிச்சையை 49 தம்பதிகளுக்கு இந்த மருத்துவமனை இலவசமாக அளிக்க உள்ளது மேலும் 49 மாணவ, மாணவிகளுக்கு நோயாளிகள் பராமரிப்புக்கான செவிலியர் கல்வி திட்டம் துவங்கி பயிற்சி அளித்து கிராமப்புறங்களில் சேவையாற்றும் திட்டத்தை துவங்கியுள்ளோம் மேலும் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைபகுதிகளிலும் சுகாதார முகாம்கள் குழந்தைகள் முழு உடற்பரிசோதனை முதியோர் முழு உடற்பரிசோதனைகள் பெண்கள் முழு உடற்பரிசோதனைகளையும் இலவசமாக இம்மருத்துவமனையின் சார்பில் அளிக்கவுள்ளோம் குறிப்பாக நோயாளிகளை செவிலியர் பராமரிக்கும் திட்டம் கிராமப்புறங்களில் பயனுள்ளதாக அமையும் கேன் சர் ஆராய்ச்சி மையமும் மேலும் ரேடியோலஜி சிகிச்சை அளிக்கும் முறையும் இங்கு துவங்கபடவுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் செய்யபடும் இருதய அறுவை சிகிச்சை கேன்சர் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் இங்கு செய்யபடுகிறது. தமிழக அரசின் உதவி 80 சதவிகிதம் கிடைப்பதில் மக்கள் பயன்பெறுகிறார்கள் ஜமுனாமரத்தூர் மலைகிராமத்தில் நாராயணி மருத்துவமனை ஒன்று மலைகிராமத்தில் அமைத்து மலைவாழ் மக்கள் சிகிச்சை பெறும் வசதியையும் செய்யவுள்ளோம் என கூறினார்.
No comments:
Post a Comment