வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ஷியா கிச்சன் என்ற ஹோட்டலை முனவர் பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹோட்டலுக்கு வேலை செய்வதற்காக தனது ஹோட்டலுக்கு அருகிலுள்ள கட்டடங்களுக்கு பொருட்களை வாடகைக்கு விடும் இடத்தில் கடப்பாரையை இவர் 10 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து வந்துள்ளார்.
பின்னர் பத்து நாட்கள் கழிந்து இந்த கடப்பாரையை மீண்டும் அந்த கட்டுமான பொருட்கள் வாடகை விடும் கடையில் திரும்ப ஒப்படைத்துள்ளார். அதற்கு அந்த கடை நடத்தும் உரிமையாளர் நீங்கள் 10 நாட்கள் கடப்பாரையை வைத்து வேலை செய்துள்ளீர்கள். அதற்கு வாடகையாக ரூபாய் 2000 தரவேண்டும். நீங்கள் ஏற்கனவே ரூபாய் 1000 மட்டுமே செலுத்தி உள்ளீர்கள்.
ஆதலால் மீத தொகையான ரூபாய் ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று அவரிடம் கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் உரிமையாளர் முனவர்பாஷா செய்வதறியாது திகைத்துள்ளார். ஒரு கடப்பாரையின் விலையே ரூபாய் 450 தான். ஆனால் பத்து நாட்கள் வாடகையாக ரூபாய் 2000 கேட்பது மிகவும் அதிகம் என்று சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அந்த கட்டட பொருட்களை வாடகைக்கு விடும் கடையின் உரிமையாளர் நீங்கள் மீண்டும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று தினமும் நச்சரித்து வருகிறார் என்று ஹோட்டல் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை காட்பாடி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளது இந்த பிரச்சனையை விசாரணை செய்த காவல் உதவி ஆய்வாளர் நீ மீதமுள்ள ரூபாய் ஆயிரத்தை அவரிடம் கொடுத்து விடு என்று ஹோட்டல் உரிமையாளிடம் சொல்லி அனுப்பியதாக தெரியவந்துள்ளது . இது காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் 10 நாட்கள் கடப்பாறை வாடகை ரூபாய் 2000 என்ற பேச்சு வியாபாரிகள் மத்தியில் அடிபட தொடங்கியுள்ளது. அத்துடன் அவரது ஆதார் அட்டையையும் திரும்பத் தராமல் இழுத்து அடித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமா ?என்று வணிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான பேச்சு மற்றும் பேசு பொருளாக இது மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது எப்படி இருக்கு!
No comments:
Post a Comment