Sunday, 15 December 2024

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல்.. நீதிக்கான கூட்டணி வெற்றி!

சென்னை பிரஸ் கிளப் என அழைக்கப்படும் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1972ம் ஆண்டு சென்னை பிரஸ் கிளப் உருவாக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சென்னை பிரஸ் கிளப்பிற்கு கடைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.

அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவுத்துறை சட்டத்தின் படி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று காலை வாக்குப்பதிவு நடந்தது. இதன் காரணமாக பிரஸ் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதில் நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி போட்டியிட்டது. நீதிக்கான கூட்டணி சார்பில் தலைவர் பதவிக்கு சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் பதவிக்கு அசீப் போட்டியிட்டனர். ஒற்றுமை கூட்டணி சார்பில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு ஷபீர் அகமது ஆகியோர் போட்டியிட்டனர். இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்த உடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் 659 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட அஃசீப் முகமது, இணைச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட்ட நெல்சன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட மணிகண்டன், துணைத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்ட சுந்தர பாரதி, மதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிட்டவர்களில் ஸ்டாலின், பழனி, விஜய் கோபால், அகிலா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஒற்றுமை அணி சார்பில் நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிட்ட கவாஸ்கர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.



No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...