Tuesday, 10 December 2024

விக்கிரவாண்டியைத் தொடர்ந்து.. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சு!.. பல அரசியல் கட்சியினரிடத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்துகிறதா?

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து, திமுக, விசிக, நாம் தமிழர், அதிமுக போன்ற கட்சிகள் தினமும் விஜய் குறித்து பேசி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றது.

அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," மணிப்பூரில் கொடுமைகள் நடக்கும் நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் மத்தியில் ஒரு அரசு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் அரசு வேங்கை வயல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருக்கிறது" என விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு முதன்முதலாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் தவெக தலைவர் விஜய் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்ட நிலையில் அம்பேத்கர் சிலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

சென்னையில் சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு பின்பாக நடிகர் விஜய் தனது அரசியல் வியூகரை மாற்றும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கான வியூகங்களை வகுக்கும் நபரில்.. வேறு ஒருவரை கொண்டு வருவதற்கான முயற்சியில் நடிகர் விஜய் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.

இந்த நிகழ்வில் அவர் பேசிய விஷயங்களை எல்லாம்.. அவர் எழுதவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒருவர் எழுதி கொடுத்து இருக்கிறார். அதன்படி அரசியல் வியூகம் அமைக்கும் குழு ஒன்றை தனது கட்சியில் இணைத்துள்ளார். அவர்தான் இந்த பேச்சை எழுதிக்கொடுத்துள்ளது என்கிறார்கள்.

நடிகர் விஜய்க்காக முதல் மாநாட்டில் வேறு ஒருவர்தான் ஆலோசனைகளை வகுத்தார். ஆனால் அந்த ஆலோசகரை மாற்றிவிட்டு.. தற்போது வேறு ஆலோசகரை நியமிக்கும் திட்டத்தில் விஜய் இறங்கி இருக்கிறாராம். அதன்படியே இந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு வேறு ஒரு ஆலோசகரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் விஜயுடன் முழுமையாக இணையும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் என்ன பேசினார்: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார் . பெரும் சர்ச்சைகள், விவாதங்களுக்கு இடையே இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.

இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனால் வர முடியாமல் போய்விட்டது; அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இங்கு நம்முடன் தான் இருக்கும்.

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு '200 தொகுதிகளை வெல்வோம்’ என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. இருமாப்போடு 200 தொகுதிகளிலும் வெல்வோம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்

நான் ஏன் மழை வெள்ளத்திற்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறதும், அறிக்கை விடறதும், மழையில் நீரிலிருந்து ஃபோட்டோ எடுக்குறதும்... எனக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடில்ல.

மணிப்பூர் விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் மத்தியில் ஆட்சியில் செய்துவருகிறார்கள். வேங்கைவயல் விஷயத்தில் இங்கிருக்கும் சமூக நீதி அரசும் ஒன்றும் செய்யவில்லையே... இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்திருந்தால் வெட்கித் தலைகுனிந்திருப்பார். ஜனநாயகத்தின் ஆணி வேரே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்தான். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரமாகவும், நியாயமாகவும்தான் தேர்தல் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்துடன் நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது வலிமையான வேண்டுகோள் என்று விஜய் கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். அதே நேரத்தில் 2026 நிச்சயம் போராட்டமாக தான் இருக்கும் வரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது திட்டம். இதற்காக கட்சியில் இளைஞர்களை அதிகமாக சேர்ப்பது, அவர்களுக்கு பதவி கொடுப்பது என திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நடிகராக வருபவர் விஜய். 2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழில் அதிக வசூல் செய்தது அவரது 'தி கோட்' திரைப்படம் தான். அந்த அளவுக்கு விஜய் படம் என்றாலே 300 கோடி 400 கோடி நிச்சயம் வசூலிக்கும் என்ற நிலை இருக்கிறது.

இப்படி தனது சினிமா வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதே அதனை விட்டு விலகி அரசியலை குறிக்கப் போகிறேன் என விஜய் அறிவித்தார். சொன்னது மட்டும் இல்லாமல் அதனை செய்தும் காட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்ததோடு, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள், ஆலோசனைகள், மாணவர் சந்திப்பு, சினிமா சூட்டிங் என பிசியாக இருந்த விஜய் கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தி காட்டினார்.

தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை அந்த மாநாடு குறித்த பேச்சு தான் தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. மேலும் எடுத்த எடுப்பிலேயே பாஜக, திமுகவுக்கு எதிராக தனது அரசியல் இருக்கும் என கூறியது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் பேச்சு தமிழ்நாட்டில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து திமுக, விசிக, நாம் தமிழர், அதிமுக போன்ற கட்சிகள் தினமும் விஜய் குறித்து பேசி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றது.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றாலும், வெற்றிக்கனியை ஏற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பது விஜய்க்கு தெரியும். ஏற்கனவே களத்தில் பலமாக இருக்கும் அதிமுக, திமுக என்ற இரு யானைகளை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் கிடையாது என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார். அவரை பொறுத்தவரை வரும் காலத்தில் 2031, 2036 சட்டமன்றத் தேர்தல்கள் தான் தனது டார்கெட், அதற்காக இளைஞர்களை தற்போது தயார் செய்து களத்தில் இறக்க வேண்டும், அதை நோக்கியே தனது பயணம் இருக்க வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதை நோக்கி விஜயின் நடவடிக்கைகளும் இருக்கிறது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...