வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பொய்கை சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை
கால்நடை மருந்தகம் பொய்கை அரசு மருந்தகத்தை சுற்றி அருகிலுள்ள ஏரிக்கு செல்லும் கால்வாய் போதிய இணைப்பு வசதி இல்லாததால் தாழ்வான பகுதியான கால்நடை மருந்தகம் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்று காட்சியளிக்கின்றது.
இதனால் அங்கு மருத்துவர்கள் மற்றும் கால்நடைகளும் மற்றும் பொதுமக்களும் செல்ல முடியாமல் மிகவும் பாதிப்புக்கும் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment