திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்பட்டது. முன்னதாக கோவில் பணி செய்ய வந்த வருவாய்த்துறையினர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியனை அனுமதிக்காமல் போலீசார் கடுமையாக நடந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
திருவண்ணாமலையில் பிரசித்திப்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இது விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
கடந்த 4ம் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. விழாவின் 10வது நாளான கார்த்திகை திருநாளில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோவில் பின்புறம் 2668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மலைச்சரிவு ஏற்பட்டதால் நேற்று அனைத்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
மகா தீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் மலையின் உச்சிக்குச் சென்று தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும்மற்ற பக்தர்கள் மகாதீபம் ஏற்றப்பட்டவுடன் கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியனுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், அவர் திரும்ப செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது தான் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கும் இடையே பிரச்சனை இருப்பதும், இதனால் மாவட்ட ஆட்சித்தலைவர்பாஸ்கர பாண்டியனுக்கு அனுமதி மறுத்ததும் தெரியவந்துள்ளது.
அதாவது, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 14 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாடவீதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டது. பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசன அடையாள அட்டையுடன் வந்த பக்தர்களும், ஆங்காங்கே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் வருவாய்த் துறையினருடன் சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியனும் பாதிக்கப்பட்டார். அதாவது கோவிலில் மகாதீப விழாவையொட்டி வருவாய்த்துறையினர் பணிக்காக நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு என்று பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள், அலுவலர்களை பே கோபுரம் - வட ஒத்தவாட தெரு சந்திப்பில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவதாஸ் உள்ளிட்டவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், நகராட்சி ஆணையர் காந்திராஜன் உள்ளிட்டவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கோவில் உள்ளே தேவையான பணிகளை மேற்கொள்ள அவர்கள் வந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்து கெடுபிடி காட்டினர். இந்த வேளையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் போலீசாரை கடிந்து கொண்டார். கோவிலில் பணி செய்ய வருவோரை தடுத்தால் அங்கு யார் பணி செய்வது? என்று கேள்வி எழுப்பி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் உத்தரவில் போலீசாரை தாண்டி வருவாய்துறையினர் கோவிலுக்குள் அனுமதித்தனர்.
ஆனாலும் கார்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் வருவாய்த்துறையினர் நடந்து சென்ற நிலையில் தடுப்புகளை அகற்றும்படி கூறி மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் சென்றார். இந்த சம்பவம் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு அதிகாரிகளை காவல்துறையினர் ஒருமையில் பேசி அவமதித்ததாக வருவாய்த்துறையினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment