கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஓசூர் சிப்காட் ரோட்டரி சங்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் சிறந்த நன்கொடையாளருக்கான பாராட்டு என முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், 2025 - 28 ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளராக ஆர்.வாசு, 2027 - 28 ஆண்டிற்கான மாவட்ட ஆளுநராக எஸ். லோகநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர்களுக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி பேசினார்கள்.
மேலும் ரோட்டரி சங்கத்தில் எண்டோர்மென்ட் டோனார் என அழைக்கப்படும் சிறப்பு நன்கொடையாளராக 25 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பில் நன்கொடை கணக்கை துவங்கியதற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இலங்கை நாட்டில் வாழும் 315 தமிழ் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நோக்கில், 15 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, ஓசூர் சிப்காட் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் சிவக்குமார் மற்றும் சுதாகர் ஆகியோர் ரோட்டரி சங்க அறக்கட்டளைக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment