எழுத்தாளருமான டாக்டர் எஸ். கதிரேசனுக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டது.
பேரணாம்பட்டு புதிய லைன் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டாக்டர். எஸ். கதிரேசன். இவரது முதல் கட்டுரை 1995 ஆம் வருடம் பேரணாம்பட்டு அரவட்லா மலையில் கரடிகள் தொல்லை என்ற தலைப்பில் இவரது முதல் கட்டுரை. தினகரன் நாளிதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து பல்வேறு தினசரி, மாத, வார பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி வந்தார். இவரது கேள்விக்கு கமலஹாசன், நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர், வைகை புயல் வடிவேலு , கேப்டன் விஜயகாந்த், நடிகர் சரத்குமார் ,நடிகர் பார்த்திபன் நடிகைகள் லஷ்மி மேனன், சாய் பல்லவி, நடிகர் விவேக், இசை அமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட பலர் பதில் கூறியிருக்கிறார்கள். மேலும் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தினகரன் நாளிதழின் இணைப்பான வசந்தம் இதழில் திறமை தான் முக்கியம் என்ற சிறுகதையையும் எழுதியுள்ளார். மேலும் 500க்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு டெல்லியில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் விருதைப் பெற்றுள்ளார். 2021 ஆம் வருடம் சென்னை சர்வதேச பல்கலைக்கழகம் நிருபர் எஸ். கதிரேசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. கடந்த 2024 அக்டோபர் மாதம் சென்னையில் ஒரு ட்ரஸ்டின் சார்பில் சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோயம்புத்தூர் கேரளா கிளப் விடுதியில் நடந்த விருது வழங்கும் விழாவில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு செய்தியாளர் எஸ். கதிரேசனுக்கு அவரது சேவையை பாராட்டி சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment