Monday, 16 December 2024

ஆசிய அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்ற வடசென்னை வீரர்!.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் குத்துசண்டை வீரராக இருந்து வருகிறார். 

இவர் வியாசர்பாடி சர்மா நகர் பகுதியிலுள்ள எம்கேபி நகர் காவல் துறை போலீஸ் பாயஸ் கிளப்பில் குத்து சண்டை பயிற்சி பெற்று வருகிறார். 

தேசிய அளவலான பல போட்டிகளில் பங்கேற்ற அவர் தற்போது முதன் முறையாக பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய அளவிலான சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார். 

ஆசிய அளவிலான உலக குத்துச்சண்டை கவுன்சில் நடத்திய சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் WBC CONTINENTAL FLY WEIGHT (ப்ளை வெயிட்)என்ற பிரிவில் பங்கேற்ற சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த பி.ராமகிருஷ்ணன் அந்த போட்டியில் வெற்றி பெற்று தங்க பெல்ட்டை கைப்பற்றியுள்ளார். 

கடந்த 29 ஆம் தேதி பங்களாதேஷில் நடைபெற்ற இறுதி போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷை சேர்ந்த எம்டி.சபியுல் இஸ்லாம் என்பவரை 8 சுற்று ஆட்டத்தில் மூன்று நடுவர்களின் முன்னிலையில் 79-71,  76-70, 76-70 புள்ளிகளின் அடிப்படையில் 3 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அவரை வீழ்த்தி தங்க பெல்ட்டை கைப்பற்றினார். தற்பொழுது இந்தியாவில் முதலிடத்திலும் உலக தரத்தில் இவருடைய எடை பிரிவில் 14வது இடத்திலும் இருக்கிறார்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...