Sunday, 22 December 2024

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விசிட் அடித்த அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து பெண் ஊழியர் கோரிக்கை மனு அளித்தார்!

சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து பெண் ஊழியர் கோரிக்கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றார்.

உயிரியல் பூங்காவில் புதிய பேட்டரி வாகனங்கள் மற்றும் புதிய 3டி திரையரங்களை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். அமைச்சர் பொன்முடி வந்திருப்பதை அறிந்ததும் பூங்காவில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பேட்டரி காரில் சென்ற அமைச்சர் பொன்முடியை மறித்து கோரிக்கை மனு வழங்கினர். இந்த வேளையில் பெண் ஊழியர் ஒருவர், அமைச்சர் பொன்முடியை கும்பிட்டபடி தங்களின் கோரிக்கையை முன்வைத்தார். அப்போது அந்த பெண் ஊழியர், ‛‛ நாங்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறோம். மிகவும் குறைவான கூலிக்கு தான் பணி செய்கிறோம்.

சம்பளம் குறைவு என்றாலும் கூட நாங்கள் உயிரியல் பூங்கா நிர்வாகத்தை நம்பி தான் வேலை செய்து வந்தோம். ஆனால் இப்போது இன்னொரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான வேலையை செய்து வருகிறோம். நாளைக்கு எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட நாங்கள் யாருகிட்ட போய் கேட்க முடியும்.

நாங்கள் 213 பேர் பணி செய்கிறோம். நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான். சம்பள உயர்வு வேண்டும். நாங்கள் வேலை செய்வதற்கு ஏற்ப சம்பள உயர்வு வேண்டும். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'' என்று கூறி திடீரென்று அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...