அமுதா ஐஏஎஸ் உள்பட 5 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வை தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். இவர் தமிழ்நாட்டில் 1994 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். தற்போது பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் பணிநிலை கூடுதல் செயலாளராக இருந்தார். இவர் உத்தரகாண்ட் முசிறியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதமியில் பொது நிர்வாகத்தின் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் பெண்கள் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் தமிழக அரசின் கீழ் 15 வெவ்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்களாக உள்ள 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக உள்ள அமுதா ஐஏஎஸ்ஸுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது போல் அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா , அபூர்வா ஆகியோருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு தமிழக அரசு வெளியிட்டது.
இவர்கள் 5 பேரும் 1994 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளாவர். அமுதா ஐஏஎஸ் மதுரையை சேர்ந்தவர். இவர் விவசாய அறிவியல் படித்துள்ளார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராகவும் இருந்தார்.
முசிறியிலுள்ள உத்தரகாண்ட் பயிற்சி அகாதெமியில் பேராசிரியராகவும் அமுதா பணியாற்றியுள்ளார். குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான ஐநா குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறை தமிழக எய்ட்ஸ் துறையில் இயக்குநராகவும் இருந்தார்.
2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது ஏராளமானோர்களை இவர் மீட்டுள்ளார். இவர் உள்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது வருவாய்த் துறையின் முதன்மை செயலாளராகவும் இருந்தார்.
அபூர்வா ஐஏஎஸ்- இவர் உயர்கல்வித் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நல்லபடியாக நடத்தி முடித்தார். வெளிநாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் வந்திருந்தனர். அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு வியக்கும் வகையில் நடத்தியிருந்தார். இவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் வேளாண் துறை முதன்மை செயலாளராகவும் இருந்தார். தமிழக வேளாண் பட்ஜெட்டை சிறப்பாக தயாரித்திருந்தார்.
காகர்லா உஷா- தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளராக இருந்து வருகிறார்.
அதுல் ஆனந்த்- சிறுகுறு நடுத்தர துறையின் முதன்மை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
சுதீப் ஜெயின்- இவர் தமிழ்நாடு கனிமங்கள் நிர்வாக இயக்குநர், துணை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
No comments:
Post a Comment