இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் சம்பாத்தியத்தை வைத்து செலவுகளைச் சமாளிக்க முடிவதில்லை. இதனால் பலரும் கடன் வாங்குகின்றனர். அப்படி கடன் வாங்கிய பிறகு கடன் வழங்குனர் கூறிய காலகட்டத்திற்குள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு வேலை கடன் வாங்கியவர் ஒரு ஈஎம்ஐ தவணையைத் தவறவிட்டாலும் அதற்கு கடன் வழங்குனர் அபராதம் விதிக்கவோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவோ உரிமையுண்டு. ஆனால் கடன் காலத்தின் போது கடன் பெற்றவர் இறந்துவிட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தப் பதிவில் அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
கடன்காலத்தில் ஒருவர் இறந்தால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு?: கடன் காலத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த கடன் தொகைக்கு யார் பொறுப்பு? என்பது கடனின் பிணையத்தின் அடிப்படையில் மாறுபடும்.
ஹோம் லோன்களை பொறுத்தவரையில் கடன் பெற்றவர் வேறு ஒருவனுடன் இணைந்து கடன் பெற்றிருந்தால் இறந்தவருக்காக மற்றொருவரை கடன் வழங்குனர் தேடுவர். ஒருவேளை தனிநபராக கடன் பெற்றிருந்தால் இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசை கடன் வழங்குநர் அணுகலாம். அதோடு கடன் பெற்றவர் ஹோம் லோன் இன்சூரன்ஸ் பெற்றிருந்தால் கவலை இல்லை. நிலுவையில் உள்ள கடன் தொகை காப்பீடு மூலம் செலுத்தப்படும்.
மாறாக கடன் பெற்றவர் டெர்ம் இன்சூரன்ஸ் மட்டுமே பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அந்தத் தொகையானது நாமினியின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு, செயல்முறைகளை பின்பற்றி சட்டபூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். அதன் பிறகு இறந்தவரின் வீட்டு கடன் மற்றும் பிற கடன்களை செலுத்துவதற்கு இந்த டேர்ம் இன்சூரன்ஸ் தொகையை சட்டபூர்வ வாரிசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கார் கடன்களை செலுத்தும் போது கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் கடன் வழங்குனர் மீதமுள்ள தொகையை வசூலிக்க கடன் வாங்கியவரின் குடும்பத்தை பார்வையிடலாம். வாகனம் வாங்குவதில் ஆர்வமுள்ள வாரிசுகள் இருந்தால் மீதமுள்ள நிலுவைத் தொகையை அந்த வாரிசு திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு வேலை கடன் தொகையை திருப்பி செலுத்த சட்டபூர்வ வாரிசுகள் மறுத்தால், கடன் வழங்குனர் வாகனங்களை பறிமுதல் செய்து, ஏலம் விட்டு, அதன் மூலம் தங்களுடைய இழப்பை ஈடுசெய்வதற்கு உரிமையுண்டு.
தனிநபர் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள்: பினையத்தை வைத்து வாங்கும் கடன்களுக்கு மாறாக கிரெடிட் கார்ட் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் அன்செக்யூர்டு லோன்களாகக் கருதப்படுகின்றன. இதற்கு எந்த ஒரு சொத்தையும் வைத்து கடன் பெற வேண்டிய அவசியம் இல்லை. கடன் காலத்தில் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் நிலுவைத் தொகையை சட்டபூர்வ வாரிசு அல்லது குடும்ப உறுப்பினர்கள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. ஒருவேளை கடன் பெற்றவரோடு இணைந்து இன்னொருவரும் கடன் பெற்றிருந்தால் வங்கி அந்த நபரிடம் கடன் தொகையை வசூலிக்கலாம். ஆனால் இணைந்து கடன் வாங்கியவர் இல்லை என்றால் கடனை மீட்கும் மாற்று வழிகள் இல்லாத நிலையில் கடன் வழங்குனர் கடனை செயல்படாத சொத்தாக வகைப்படுத்தும்.
நமக்கு எப்போது அவசரமாக பணத் தேவை ஏற்படும் என்று கணிப்பது கடினம். நோய் பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை என எதில் வேண்டுமானாலும் சிக்கல்கள் வரலாம். அதேபோல், நண்பர்களுடன் தொலைதூர இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கலாம், திருமண செலவுக்காக இருக்கலாம் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தனிநபர் கடன் தேவைப்படுகிறது. ஆனால், உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் எப்படி கடன் பெற முடியும்? இதோ குறைந்த சிபில் ஸ்கோரிலும் தனிநபர் கடனை எவ்வாறு பெறுவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
சமீபகாலமாக, பணத்தேவை ஏற்படும் போது, பெரும்பாலானோர் வங்கிகளில் தனிநபர் கடன் வாங்குவது, சிறிய நிதி தேவைகளுக்கு கூட தனிநபர் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. மேலும் கடன் பெறும் செயல்முறை முன்பை விட இப்போது எளிதாக உள்ளது. கடன் வழங்கும் வங்கிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், எந்த ஆவணங்களும் தேவையில்லாமல் விரைவாக கடன் வழங்கப்படுகிறது.
தனிநபர் கடனுக்கு எந்த உத்தரவாதமும் அல்லது பாதுகாப்பும் வழங்கப்படாததால், இந்த தனிநபர் கடன்களை பாதுகாப்பற்ற கடன்கள் என்று குறிப்பிடலாம். இந்த கடனை எந்த தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். எந்தச் சொத்தையும் பிணையமாக அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை. இதனால், உங்களுக்கு கடன்களில் ஆபத்து அதிகரிக்கிறது. வங்கிகள் கடனாளியின் சிபில் ஸ்கோர் அல்லது வருமானத்தைப் பார்க்கின்றன. இங்கே, உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் பெறும் திறன் குறையும்.
சிபில் ஸ்கோர் என்பது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற கிரெடிட் பீரோக்கள் வழங்கும் மூன்று இலக்க மதிப்பெண் ஆகும். இது பொதுவாக 300 முதல் 900 மதிப்பெண்கள் வரை இருக்கும். இது உங்கள் செலவுகள் மற்றும் கடன் வரலாற்றைக் காட்டுகிறது. குறைந்த சிபில் ஸ்கோர் என்றால் அவர்களுக்கு நிதி ஒழுக்கம் இல்லை என்று அர்த்தம். கடந்த கால நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாததால் உங்கள் சிபில் ஸ்கோர் குறையும். உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால், நீங்கள் கடன் வாங்கக்கூடிய வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.
சிபில் ஸ்கோர் என்னவாக இருக்க வேண்டும்?: 300-500க்கு இடைப்பட்ட சிபில் ஸ்கோர் மோசமான மதிப்பீடாகக் கருதப்படுகிறது. இங்கு கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 550-600 க்கு இடையில் இருந்தால் அது சராசரி சிபில் ஸ்கோராகக் கருதப்படுகிறது. 650-750 க்கு இடைப்பட்ட சிபில் ஸ்கோர் ஒரு நல்ல மதிப்பீடு ஆகும். அதேபோல், 750- 900 வரம்பு சிறந்தது. சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இங்கு குறைந்த வட்டியில் கடன்கள் கிடைக்கும்.
ஆனால் உங்களிடம் 450 கிரெடிட் ஸ்கோர் இருந்தால், நிபுணர்களின் கூற்றுப்படி, தனிநபர் கடன் பெறுவது சற்று கடினம். அதிகமாக கடன் வாங்குவது, EMIகளை முறையாக செலுத்தாததால் சிபில் ஸ்கோர் குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில் கடன் வழங்கும் வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கலாம். ஆனால் இங்கும் அதிக வட்டி விகிதத்தில், குறுகிய காலத்திற்கு கடன் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. வேறு சில சமயங்களில் சொத்தை இங்கு அடமானம் வைக்கலாம். ஆனால், அந்த கடன்களில் மாதந்திர இஎம்ஐ மிக அதிகம்.
சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் போது, கடன் வழங்குபவருக்குப் பத்திரமாக ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கமான தனிநபர் கடனுடன் ஒப்பிடும்போது இந்த பாதுகாப்பான கடன்களுக்கான வட்டி குறைவாக உள்ளது.உங்களுக்கு நிலையான வேலை, வழக்கமான வருமானம் இருந்தால், இதை வங்கிகளில் நிரூபிக்கலாம். இது உங்கள் கடன் தகுதியை மேம்படுத்துகிறது. உங்கள் சுயவிவரம் வலுவானது என்று காண்பிக்க உங்கள் முதலீடுகள் மற்றும் சொத்துக்களின் விவரங்களையும் வெளியிடலாம்.நல்ல சிபில் ஸ்கோர் உள்ள ஒருவரை உத்தரவாதமளிப்பவராகச் சேர்ப்பது வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்குவதைக் கருத்தில் கொள்ள உதவும். இதுவே குறைந்த கடன் தொகைக்கு விண்ணப்பிப்பது சிறந்த வழி ஆகும்.
No comments:
Post a Comment