Tuesday, 24 December 2024

குக்கலப்பள்ளி ஸ்ரீ காலபைரவர் மலை கோயிலில் மார்கழி மாத அஷ்டமி சிறப்பு வழிபாடு செய்தனர்.

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் தாலுகா, லத்தேரி அடுத்த குக்கலப்பள்ளி ஸ்ரீ காலபைரவர் மலை கோயிலில் மார்கழி மாத அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. அஷ்டமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அதிகாலையில் 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காலபைரவரை வழிபட்டனர். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பணித்திலகம் ஸ்ரீ சாரதி சிறப்பாக செய்திருந்தார். இந்த சிறப்பு அஷ்டமி வழிபாட்டில் கலந்துகொண்டு ஸ்ரீகால பைரவரை வழிபட்ட பக்தர்கள் அனைவருக்கும் பிற்பகல் 1 மணி முதல் இடைவிடாது அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...