இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா, முப்பதுவெட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட முப்பதுவெட்டி நெடுஞ்சாலை ஓரம், ஆற்காடு - மேல்மருவத்தூர் ஓம்சக்தி பக்தர்கள் சுற்றுலா பஸ்ஸில் சென்ற போது, டீ குடிக்க முப்பதுவெட்டி அருகே வாகன ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் பள்ளமாக இருந்த இடத்த்தில், மின்சார கம்பிக்கு கீழே தனிநபருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு முன்பாக நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இரவோடு இரவாக டிப்பர் லாரியின் மூலம் நான்கு அடிக்கு மேல் மண் கொட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் நிரவி சமப்படுத்திய இடத்தில் தான் வாகன ஓட்டுனர் போகும் பாதையை தவிர்த்து எதிர்ப்புறமாக சென்று மேலே மின்கம்பி இருப்பதை கவனக் குறைவாக நிறுத்தியபோது வாகனத்தின் மேலே மின்சாரம் உரசி பஸ்ஸில் மின்சாரம் பாய்ந்து அகல்யா என்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, இந்த விபத்துக்கு உண்மையான காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவே என தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த
வெங்கடாபுரம் பகுதியைச்
சேர்ந்தவர் சங்கர் விவசாயி இவரது மகள் அகல்யா (வயது 20), இவர் 10ம்
வகுப்பு வரை படித்துள்ளார். அகல்யா உள்பட அப்பகுதியைச் சேர்ந்த 52 பேர் மாலை அணிந்து ஓம் சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பஸ்ஸில் 21ம் தேதி சனிக்கிழமையன்று இந்த பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சுற்றுலா பேருந்து ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியிலுள்ள டீக்கடை அருகே சனிகிழமையன்று அதிகாலை 4.15 மணிக்கு நிறுத்தப்பட்டது. பஸ்ஸிலிருந்து
டீ குடிக்க கீழே இறங்கியுள்ளனர். பஸ்ஸிலிருந்து அகல்யா கீழே இறங்க இருந்த நிலையில் அங்கு தாழ்வாக இருந்த மின்கம்பி பஸ் மீது
உரசி பஸ்ஸின் மீது கைப்பிடி கம்பிகளில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
அந்தநேரத்தில் அகல்யா பஸ் படிக்கட்டின் கைப்பிடி கம்பியை பிடித்தவாறு கீழே இறங்கியுள்ளார். அப்போது அகல்யா மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அகல்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற
நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நேர்ந்த பரிதாபம்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆற்காடு காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment