Wednesday, 25 December 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை ,எளியவர்களுக்கு இலவச புடவைகள் வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிளைத்தான்பட்டறை பவானி நகர் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகர அமைப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஏழை, எளியவர்கள் 500 பேருக்கு புடவைகள் வழங்குதல் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் 100 பேருக்கு பேனா, பென்சில் நோட்டு புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்குவது என கடந்த 10 ஆண்டுகளாக தொண்டாற்றி வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளியவர்கள் 500 பேருக்கு புடவைகள் வழங்கியும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் 100 பேருக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் வழங்கினார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் வேலூர் மாநகர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலிப் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கியும், ஏழை, எளிய பெண்களுக்கு புடவைகள் வழங்கியும் சிறப்பித்தார். அப்போது அவர் குறிப்பிட்டு பேசுகையில், ஏழை, எளியவர்களுக்கு கொடுப்பதில் தான் இன்பம் உள்ளது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மேம்படும். அத்துடன் கொடுத்து உதவும் உள்ளம் அனைவருக்கும் வரவேண்டும். பண்டிகையின் போது பிறருக்கு வழங்குவது சிறப்பானது. அத்துடன் நாம் எந்த உணவு உண்கிறோமோ அதை அடுத்தவருக்கு வழங்க வேண்டும். நாம் எந்த உடை உடுக்கிறோமோ அதையே அடுத்தவருக்கு வழங்க வேண்டும். இப்படி எண்ணங்களை நாம் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நாம் உயர்வோம். இறைவனும் நமக்கு உதவுவார் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் நந்தன் மற்றும் காட்பாடி ஜே. ஜே. நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவ ஊழியர் முனுசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்த நலத்திட்ட உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு வழங்கியும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கியும் மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சமூக ஆர்வலரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகர அமைப்பாளருமான முனுசாமி வெகுவிமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...