Monday, 30 December 2024

சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு விநியோகித்த காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காட்பாடி பகுதியில் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் அபராத விவரம் குறித்த துண்டு பிரசுரங்களையும், சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விழிப்புணர்வையும் விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சீட்டு பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குதல், மிக மிக வேகமாக வாகனங்களை இயக்குதல், மதுபோதையில் வாகனம் இயக்குதல், ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் இயக்குதல், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவைகளை விதிமுறைகளாக கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்துதான் ஓட்ட வேண்டும். 4 சக்கர வாகனத்தை ஓட்டும்போது சீட்டுகள் அணிந்து ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம். மது போதையில் வாகனத்தை ஓட்ட வேண்டாம். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வாகனம் இயக்கக் கூடாது. அதிவேகமாக வாகனம் இயக்கக் கூடாது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் இயக்க வேண்டும். சிறுவர்களை வாகனம்  இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...