Wednesday, 18 December 2024

மதுரையில் வரி பாக்கியை குறைத்து நிர்ணயம் செய்ய லஞ்சம் பெற்ற ஜிஎஸ்டி அதிகாரிகள்.. கையும் களவுமாக சிபிஐயிடம் சிக்கியுள்ளனர்.

லஞ்சம் வாங்கிய புகாரில் மதுரை மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையாளர் சரவணகுமார் உள்ளிட்ட 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி பாக்கியை குறைப்பதற்காக லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

நாடெங்கும், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் புரையோடிப் போயுள்ளன. யாரும் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள அதிகாரிகளே, லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளைச் செய்யும் அவலம் ஆங்காங்கே நடந்து வருகிறது.

பொதுமக்கள் தங்களின் தேவைக்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போது அவர்களிடம் லஞ்சம் பெறுவது தொடங்கி, பல மட்டங்களிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அப்படி, மதுரையில் லஞ்சம் வாங்கியபோது ஜிஎஸ்டி அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.

மதுரையில் கார்த்திக் என்பவரிடம் ஜிஎஸ்டி வரி பாக்கியை குறைப்பதற்காக மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர்கள் 2 பேர் ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமான சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினர். ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்றதில் தொடர்பு இருந்ததை அடுத்து மத்திய ஜிஎஸ்டி பொறுப்பு துணை ஆணையாளர் சரவணகுமாரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மூவரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை ஆத்திகுளம் பகுதியிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் கைது வழக்குப் பதிவு செய்து. அதன் பிறகு அவர்கள் மூவரையும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

மேலும், லஞ்சப் புகார் தொடர்பாக ஜிஎஸ்டி பொறுப்பு துணை ஆணையாளர் சரவணகுமார் வீட்டில் சோதனை மேற்கொள்ள தஞ்சாவூர் சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திருவிடைமருதூரிலுள்ள அவரது வீட்டிற்கு விரைந்து, அங்கு சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் ஜிஸ்டி அதிகாரிகள் லஞ்சம் பெற்றபோது சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...