Wednesday, 25 December 2024

காட்பாடி டெல் குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் மருத்துவ கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டியுள்ள விஷமிகள்: கொடிய நோய்கள் பரவும் அபாயம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை டெல்  குடியிருப்பு அருகில் கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு மூட்டை மூட்டையாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இதுபோன்ற விஷமத்தனமான வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் வீசப்பட்டுள்ள கழிவுகளால் தொற்று நோய்கள் உருவாகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பகுதி வாழ் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கேரள கழிவுகளை எப்படி தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தார்களோ அதுபோன்று இந்த மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை இந்த பகுதியில் கொட்ட விடாத வகையில் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ,பொதுமக்களும் இந்த பகுதியில் பயணம் செய்வோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று வேலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா ?என்பதை நாம் பொறுத்திரு
ந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...