மதுரை மத்திய சிறையில் பணிபுரியும் உதவி ஜெயிலரை ஒரு பெண் நடுரோட்டில் வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.. தற்போது உதவி ஜெயிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது மதுரையில்?
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர் பணிபுரிந்துவருகிறார். மத்திய சிறையில் சிறைவாசியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர், பைபாஸ் சாலைப்பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். வழக்கமாக, இந்த ஓட்டலுக்கு சென்றுதான் உதவி ஜெயிலர் பாலகுருசாமி எப்போதுமே சாப்பிடுவாராம்.
ஓட்டல் ஓனருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. இந்த மகள்களுக்கும் கல்யாணமாகி, பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த பெண் குழந்தைகள் அதாவது ஓட்டல் ஓனரின் பேத்திகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள்.. இவர்கள் அனைவருமே அதே ஓட்டலில்தான் இருந்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓட்டலுக்கு வழக்கம்போல சாப்பிட சென்றுள்ளார் உதவி ஜெயிலர் பாலகுருசாமி.. அப்போது ஓட்டல் ஓனரின் பேத்தியான பள்ளிச்சிறுமியிடம், தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து ஏதாவது உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்ள சொல்லி கேட்டுள்ளார். அதற்கு பிறகு, அடிக்கடி சிறுமிக்கு போன் செய்து, நலம் விசாரித்து வந்திருக்கிறார்.
இதற்கிடையே, உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த சிறுமியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்படியே, தன்னுடைய தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோருடன் அந்த மாணவி, உதவி ஜெயிலர் அழைத்த இடத்திற்கு சென்றிருக்கிறார். இதில் சித்தி, (30 வயது) இளம்பெண் ஆவார்.
உதவி ஜெயிலர் பாலகுருசாமி, மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்து விட்டு வெளியே வந்தபோது, தான் சொன்னபடியே சிறுமி வந்து நிற்பதை பார்த்தார்.. உடனே சிறுமியை தன்னுடைய பைக்கில் வருமாறு அழைத்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிடவும், அதற்குள் மாணவியின் சித்தி ஓடிச்சென்று, உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சரமாரியாக நடுரோட்டிலேயே தாக்கினார்.
தன்னுடைய மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி, நடுரோட்டில் பாலகுருசாமியை சித்தி கடுமையாக தாக்கினார். இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.. சிலர் இந்த காட்சியை செல்போனில வீடியோ எடுத்தனர்.. உதவி ஜெயிலரை பெண் தாக்கும் வீடியோ காட்சிகள்தான் இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
இறுதியில், பாலகுருசாமி, சிறுமியின் தாய் மற்றும் சிறுமி ஆகியோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். 2 தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பிறகு உதவி ஜெயிலர் தாக்கிய மாணவியின் சித்தி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சிறை உதவி ஜெயிலர் பால குருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment