Friday, 13 December 2024

காட்பாடி பகுதியில் ஏரிகள் நிரம்பியதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி நிர்வாகம்!

வேலூர் மாநகராட்சி காட்பாடி ஒன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள கழிஞ்சூர் மற்றும் தாராப்படவேடு ஆகிய இரண்டு ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. இதில் தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏரிகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற உள்ளதால் உபரி நீர் வரும் கால்வாய்களில் பொதுமக்கள், குழந்தைகள் தண்ணீரில் விளையாடவோ அல்லது துணி துவைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்றும் தண்ணீரில் தேவை இன்றி இறங்க வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலமாக வேலூர் மாநகராட்சியின் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் பொதுமக்களுக்கு வீதி வீதியாகச் சென்று அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம். சுனில் குமார் மற்றும் கவுன்சிலர் டீட்டா சரவணன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...