Thursday, 26 December 2024

திருவள்ளூரில் பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: நில அளவையருடன், உதவியாளரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்த பொறியில் சிக்கியுள்ளனர்

பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்தது. நில அளவையருடன் சேர்ந்து உதவியாளரும் சிறைக்கு சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி, பொதுவெளியில் அம்பலப்பட்டு சிக்கி வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு விஏஓ முதல் தாசில்தார்கள் வரை விதிவிலக்கில்லை.

அந்தவகையில், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விவகாரங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகி கொண்டே வருகிறது. இதனை களைவதற்காக தமிழ்நாடு அரசு ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்தும்கூட, முழுமையான பலனை தரவில்லை. பெண் அதிகாரிகளும், லஞ்சம் வாங்கி நாளுக்கு நாள் கைதாகி வருகிறார்கள்.

விஏஓ முதல் தாசில்தார் வரை, லஞ்ச விவகாரங்களில் சிக்கி கைதாவது, மீடியாக்களில் அம்பலமானாலும், அடுத்தடுத்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். தொடர்ந்து கைதாகி கொண்டுதான் வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி  வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தனி வட்டாட்சியர் பிரிவில் பட்டாபிராம், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(30 வயதாகிறது). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய ஆன்லைன் பட்டா பெறுவதற்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.

பிறகு பட்டா பெறுவதற்காக, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையர் சுமன் என்ற நபரை அணுகியிருக்கிறார். சுமனுக்கு (30 வயதாகிறது). பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் சுமன்.. தன்னுடைய பட்டா விஷயம் குறித்து சுமனிடம் சந்திரன் கேட்கவும், ரூபாய் 15,000 லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா வழங்க முடியும் என்று கறாராக கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ந்த சந்திரன், லஞ்சம் தர விரும்பாமல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுமனுக்கு கொடுக்குமாறு திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீசார், சந்திரனுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படியே, பணத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் சென்றிருக்கிறார்.

ஆனால், அங்கு நில அளவையர் சுமன் இல்லாததால் அவரது உதவியாளரான ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்பவரிடம் பணத்தை தந்துள்ளார். அப்போது அந்த லஞ்சப் பணத்தை பொன்னையின் பெற்றுக்கொண்ட போது அங்கு மாறுகடத்தில் மறைந்து கொண்டிருந்த திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீசார். நில அளவெரின் உதவியாளர் பொன்னையனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, சுமன்தான், பணத்தை பெறும்படி பொன்னையனிடம் கூறினாராம். இதை உறுதி செய்து கொண்ட போலீசார் சுமன் மற்றும் பொன்னையன் ஆகிய 2 பேரையுமே கைது செய்து விசாரணை மேற்கொண்டதற்கு பிறகு இருவரும் மீது வழக்குப் பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.



No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...