Sunday, 22 December 2024

நிழல் சார் பதிவாளராக மாதம் பல லட்சம் கல்லா கட்டி வளம் வரும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலக உதவியாளர்.. வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?

தமிழ்நாட்டில் சுமார் 30 சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 
செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 500-க்கும்மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பதிவுசார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில சார்பதிவாளர் அலுவகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அலுவலக ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார்கள் சென்றன. தொடர்ச்சியாக வரப்பெற்ற புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், குடியாத்தத்திலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையின் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்ட போதும், கே வி குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி காட்டினர் அப்போது கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்ததுடன். இதனைத் தொடர்ந்து, காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தின் சார் பதிவாளராக (பொறுப்பு) நித்தியானந்தம் பணிபுரிந்து வருகிறார் அங்கு கணக்கில் வராத .2 லட்சத்து 14 ஆயிரம் பணம் பறிமுதல் செய்ததுடன் அங்கு அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்த சிவக்குமார் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட அப்ரூவல் இல்லாத மனைகளுக்கும். புறம்போக்கு இடங்களை மாநகராட்சி 2வது வார்டு பெண் விமலா கவுன்சிலரின் கணவர் பூஞ்சோலை சீனிவாசன் கூறிய இடத்தில் எல்லாம் போலி ஆவணங்களில் கையெழுத்து போட்டு பத்திரப்பதிவு செய்ததின் பேரில் முறைகேடுகள் குறித்து பதிவுத்துறை ஐஜிக்கு தகவல் கிடைக்கப்பெற்றதின் தீவிர விசாரணைக்கப்படும் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக ஹாட் அசிஸ்டன்ட் சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியது காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பங்களா மேடு பகுதியில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகம் மட்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட வில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இருப்பவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த ராதிகா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நான்கு வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் குரூப் 2-வில் தேர்ச்சி பெற்று தன் சொந்த மாவட்டத்திலே திருப்பத்தூர் சார்பாதிவாளர் அலுவலகத்தில் பயிற்சி சார் பதிவாளராக பணிக்குச் சேர்ந்த முதலே எவ்வாறெல்லாம் முறைகேடு செய்யலாம் என்பதை கற்றுக்கொண்டு சுமார் ஆறு மாத காலத்தில் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வரியைப்பு செய்து உள்ளதாக அங்கு தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் பேரில் இவர். திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேர்ணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தகவல் கூறுகின்றனர். மேலும் இவர் பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு 2022 ஆண்டு பணியிடம் மாற்றிக் கொண்டு வந்த நாளிலிருந்து சார் பதிவாளர் ராதிகா பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தான் ஒரு நேர்மையான அதிகாரி போல் தன்னைத்தானே காட்டிக் கொண்டு 50 வருடத்திற்கு முன்பு உள்ள மூல மூலப் பத்திரங்களை கொண்டுவரச் சொல்லி அவர்களை அலைக்கழிக்கப்பட்டு வந்ததை கண்டித்து பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பத்திரப்பதிவு செய்யும் ஆவணங்களுக்கு லஞ்சம் வாங்குவதற்காக நூதன முறையில் அந்த ஆவணங்களில் பென்சிலில் குறியீடு செய்து வைத்து விடுவாராம். அதன் பின்னர் பேரணாம்பட்டு நிழல் சார் பதிவாளராக அலுவலக உதவியாளர் சத்தியமூர்த்தி எந்தெந்த ஆவணங்களுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என அனைத்து வேலைகளையும் அவர் கச்சிதமாக செய்து முடிப்பாராம்.
நிழல் சார்பதிவாளராக இருக்கும் அலுவலக உதவியாளர் சத்தியமூர்த்தி யார் என்று விசாரித்த போது சத்தியமூர்த்தி காட்பாடி கல்புத்தூரைச் சேர்ந்தவர் என்றும் தில்லாலங்கடி சத்தியமூர்த்தி நிழல் சார் பதிவாளராக தன்னுடைய கட்டுப்பாட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை முறைகேடான பதிவுகளுக்கு சார்பதிவாளர் ராதிகா மற்றும் நிழல் சார் பதிவாளராக இருக்கும் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மெகா வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் சார் பதிவாளர் அலுவலக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. சார் பதிவாளர் அலுவலக நிழல் சார் பதிவாளராக அலுவலக உதவியாளர் தில்லாலங்கடி சத்தியமூர்த்தியின் தலைமையில் அதே அலுவலகத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ளுறைச் சேர்ந்த அம்ஜித் என்பவர் (டேட்டா என்ட்ரி) தினக் கூலிக்கு பணி செய்வது போல் உள்ள வெளிநபரான புரோக்கர் அம்ஜித்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட எந்தப் பதிவு வேலை செய்ய வேண்டும் என்றாலும் அது அம்ஜீத் மூலம் தான் கொண்டு வர வேண்டும் என்று நிழல் சார் பதிவாளர் OA சத்தியமூர்த்தி உத்தரவின் பேரிலும் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களின் ஆவணங்களை சரி பார்க்கும் பணியானது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களான உதவியாளர்கள் செய்ய வேண்டிய வேலையை வெளிநபரான அம்ஜித் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மேஜையில் அமர்ந்து தான் ஒரு அரசு ஊழியர் போல் சார்பதிவாளரின் லாகின் ஐடி முதல் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் லாகின் மூலம் பல்வேறு பணிகளை செய்தும், இது தவிர ஈசி சரி பார்ப்பதும், பதிவு ஆவணங்கள் சரி பார்ப்பது போன்ற பணிகளை செய்து வருவது தொடர்கதையாக உள்ளதாம். அதுமட்டுமின்றி தில்லாலங்கடி நிழல் சார் பதிவாளராக வளம் வரும் OA. சத்தியமூர்த்தி முறைகேடான பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களை அழைத்து அலுவலகத்தில் சேர் போட்டு உட்கார வைத்து அவர்களுக்கு டீ காபி வாங்கி கொடுத்து ராஜ உபசரிப்பு செய்து பேரம் பேசி பெரும் தொகையை பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவுக்கு பரிந்துரைப்பதாக தகவல் கூறுவோர் அதிகம். மேலும் OA சத்தியமூர்த்தி இல்லாத சமயத்தில் அலுவலகத்தில் சார் பதிவாளர் லாகின் ஐடி மூலம் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களின் ஆவணங்களை சரி பார்த்து அம்ஜித் சரி என்று சார்பதிவாளரிடம் கண்ணை காட்டினால் போதும் பெண் சார்பதிவாளர் ராதிகாவும் உடனே பத்திரப்பதிவு செய்து பணியை முடித்துக் கொடுப்பாராம், ஏனென்றால் அம்ஜீத் என்பவர் அரசு ஊழியர் போலவே பல வருடங்களாக இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதும் அங்கு வரும் சார்பதிவாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களிடம் பேரம் பேசி கையூட்டுப் பெற்றுத் தருவதில் மிக சாமார்த்தியமானவராம்.
அலுவலக உதவியாளராக பணியில் இருக்கும் சத்தியமூர்த்தி இவர் பணத்தை மதிக்கும் அளவிற்கு பொதுமக்களை மதிப்பதில்லை? ஏனென்றால் பேரணாம்பட்டு நிழல் சார் பதிவாளராக அலுவலக உதவியாளர் தில்லாலங்கடி சத்தியமூர்த்தி இருக்கிறார் என்றும்
எவ்விதமான பதிவுச் செய்ய வேண்டும் என்றாலும் கூட காசு பணம் துட்டு மணி மணி?
என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பேர்ணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களை அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு செய்ய வரும் பெண்களிடம் நீ வா போ என ஒருமையில் அநாகரீகமாக நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உதாரணமாக கடந்த நவம்பர் மாதம் கூட மீனா என்கின்ற பெண்மணி பத்திரபதிவு பணிக்காக வந்திருக்கிறார். அவரின் வந்த பணி முடிவடைந்த நிலையில் நிழல் சார் பதிவாளர் OA சத்தியமூர்த்தி அந்த பெண்மணியை பார்த்து நீ இப்ப போய் மாலை 5 மணிக்கு வா என சொல்லி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண்மணி மீனா என்பவர் வெகு தூரம் செல்ல வேண்டிய நிலையில் சரியாக 3.30 மணி அளவில் வந்துள்ளார். பிறகு தன் பதிவு செய்த ஒரிஜினல் ஆவணங்கள் குறித்து நிழல் சார் பதிவாளர் OA சத்தியமூர்த்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அந்தப் பெண்மணியை பார்த்து ஏய் நான் உன்னை 5 மணிக்கு தான் வர சொன்னேன் இப்போது எதற்கு வந்தாய்.
அலுவலகத்திலுள்ள இருக்கையில் உட்காரக் கூடாது வெளியே போய் 5 மணிக்கு வா எனக்கூறி பெண்ணென்றும் கூட பார்க்காமல் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளும் சத்தியமூர்த்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே நிழல் சார் பதிவாளராக வளம் வரும் OA. சத்தியமூர்த்தி , வெளிநபரான அம்ஜித் ஆகிய இருவரையும் வேலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், கையும் களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கையாக உள்ளது.
டாக்குமெண்ட் ரைடர்களை நியமனம் செய்து அவர்களிடம் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளதாகவும் இவர்களைப் பற்றி நன்கு விவரம் அறிந்தவர்கள் தகவல் கூறுகின்றனர். பேர்ணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடப்பது லஞ்ச ஊழல் முறைகேடு பகல் கொள்ளை. ஆனால் வெளியில் பேசிக்கொள்வது என்னவோ அரிச்சந்திரன் வீட்டு எதிரில் வீட்டில் குடியிருப்பவர்கள் போன்றும் தங்கள் லஞ்சம் வாங்குவதே இல்லை என்றும் அனைத்தும் பத்திரப் பதிவுகள் ஆன்லைன் என்றும் பேசிக் கொள்கின்றனர். எனவே இதைப்பற்றி நன்கு தகவல் அறிந்தவர்கள் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அதிகாரி (டி.ஆர்) பொறுப்பிலுள்ள வெங்கடேசனுக்கும், பதிவுத்துறை துணைத் தலைவர் அருள்சாமி என்பவருக்கும் மாதம், மாதம் ஒரு தொகை சென்று விடுவதாகவும், ஆகையால் பேரணாம்பட்டு சார் பதிவாளர் மற்றும் நிழல் சார் பதிவாளர் ஆகிய இருவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம்?
நிழல் சார் பதிவாளராக வலம் வரும் சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்கிய பணத்தில் உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் வாங்கியுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என பேரணாம்பட்டு பத்திரப்பதிவு அலுவலக வட்டாரத்தில் பேசி வருவதால் தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. ஆகவே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினால் மட்டுமே சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டிற்கு விடை தெரிய வரும்! பொறுத்திருந்து பார்ப்போம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை!

  

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...