தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - மூத்த மந்திரி துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது மூத்த மந்திரி துரைமுருகன் ஆவேசமாக பதில் அளித்ததற்கு, எடப்பாடி பழனிசாமியும் ஆவேசமாக பதில் அளித்தார்.
ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படித்தான் பேச முடியும். வேற என்ன பேசமுடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம். “ஆ.. ஊன்னு கத்த மட்டும் தான் தெரியும். சரக்கு இருந்தால் தானே பேசியிருப்பீர்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடியது. இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் நேற்று அவையில் மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்க்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏல நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதனை தமிழக நீர்வளத்துறை மூத்த மந்திரி துரைமுருகன் வழிமொழிந்தார்.
அப்போது இதன் மீதான விவாதம் நடந்தது. அப்போ தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்ற முழு விவரங்களை கூட எங்களிடம் சொல்லாமல் நாங்கள் ஆமாம் போட வேண்டுமா என்று கேட்டார். மேலும் இந்த டங்க்ஸ்டன் விவகாரத்தினை ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இந்த தீர்மானம் போட வேண்டிய தேவையே இருந்திருக்காது என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி: சுரங்கத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம். டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என்று பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் ’இந்த திட்டம் கொண்டு வந்து 10 மாதங்கள் ஆகிறது. ஏன் கால தாமதம் என்று கேட்டிருந்தனர்’. மத்திய அரசு சொல்லியிருந்த அந்த காரணத்தை தான் நாங்கள் ஏன்? என்று கேட்கிறோம்.
மீண்டும் மீண்டும் தவறான கருத்தை எதிர்க்கட்சி தலைவர் பதிவு செய்கிறார். ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூல சுயமரியாதைக்கு மத்திய அரசு சவால் விட்டுள்ளது. தமிழக அரசு என்ன கைகட்டி வேலை செய்யும் வேலைக்காரனா?.
நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதற்கு அவர்கள் பதில் அளித்து இருந்தனர். எல்லா விவரங்களையும் வெளியில் சொல்ல முடியாது.
எடப்பாடி பழனிசாமி: முழு விவரங்கள் தராமல் தீர்மானம் கொண்டு வந்தால் நாங்க ஆமாம் போட வேண்டுமா?
டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒப்பந்தம் போட்டு முடித்து தற்போது வரை 10 மாத காலம் என்ன செய்தீர்கள். மாநில உரிமையை காக்காமல் நாடாளுமன்றத்தில் என்ன செய்தீர்கள்.
இப்போது எடுக்கின்ற நடவடிக்கையை அப்போதே எடுத்திருந்தால் இப்போது இந்த தீர்மானம் போட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதை தான் சொல்கிறோம்.
துரைமுருகன்: சுரங்கம் வரவேண்டாம் என்றால் தீர்மானத்தை ஆதரியுங்கள்.
எடப்பாடி பழனிசாமி: சட்டம் நிறைவேறிய பிறகு இப்போது தீர்மானம் கொண்டு வந்த என்ன பிரயோஜனம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். அப்போது அமைதியாக இருந்துவிட்டீர்கள்.
முதல்வர் ஸ்டாலின்: நாங்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். ஆனால் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்ததால் எங்கள் எதிர்ப்பை மீறி நிறைவேறிவிட்டது.
எடப்பாடி பழனிசாமி: சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தான் நாங்க சொல்கிறோம். இதுவரை இப்படி இருந்துவிட்டு இப்படி பதில் சொல்வது சரியல்ல. ஏனென்றால் ஒரு அரசாங்கம் அவ்வப்போது விழித்துக்கொண்டு அப்போதே அதற்கு தடை வாங்கி இருக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: அலட்சியமாக இருக்கிறது என்று அவர் சொல்கிறார். எந்த காலத்திலும் திமுக அரசு அலட்சியமாக இருந்தது கிடையாது.
சபாநாயகர் அப்பாவு: அலட்சியம் என்ற வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின்: டங்கஸ்டன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதற்கு உறுதியளிக்கிறோம்.
முதல்வர் ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் திரும்ப திரும்ப அதையே பேசுகிறார். ஏலம் விட்டாலும் சரி நிச்சயமாக உறுதியாக அதற்கு அரசு அனுமதி அளிக்காது. எடப்பாடி பழனிசாமி: மக்களோடு பிரச்சினை என்பதால் தான் இதை அவை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவர் ஒழுக்கமாக பேசுகிறார். நானும் பேசிவிடுவேன். ஏற்கனவே இந்த திட்டத்தை எல்லாம், தோண்டி எடுத்து மத்திய அரசுக்கு தெரிவித்தேன். கால தாமதம் ஆனதால் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படித்தான் பேச முடியும்.. வேற என்ன பேசமுடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம்.. “ஆ.. ஊன்னு கத்த மட்டும் தான் தெரியும். சரக்கு இருந்தால் தானே பேசியிருப்பீர்கள்”.மூத்த உறுப்பினர் மத்தவங்களுக்கு வழிகாட்டியாக இருக்கனும். மக்களோடு பிரச்சினையை உயிரை கொடுத்தாவது காப்பாற்றனும். இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது. எங்கள் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் பதில் இல்லை.
முதல்வர் ஸ்டாலின்: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி அமைந்தால் நான் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
No comments:
Post a Comment