Saturday, 7 December 2024

பேர்ணாம்பட்டு அருகே சுடுகாட்டிற்கு நிலம் வழியாக சடலம் கொண்டு செல்ல எதிர்ப்பு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே சுடு காட்டிற்கு வழியாக சடலம் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேர்ணாம்பட்டு ஒன்றியம் எருக்கம்பட்டு ஊராட்சி கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். புட்டன். மனைவி பெரியதாய்(60 வயது). இவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தொடர்ந்து இவரது உடல் அடக்கம் செய்ய நேற்றும் ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள். அப்பகுதியிலுள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்குள்ள பட்டா நிலத்தின் வழியாக சடலத்தை கொண்டு செல்ல நிலத்தில் உரிமையாளர். எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வந்த பேரணாம்பட்டு. மண்டல துணை வட்டாட்சியர் ஜெயந்தி, காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கடந்த 11 வருடங்களாக இவ்வழியாகத்தான் சடலத்தை கொண்டு சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகிறோம் என்று கூறினார். மேலும் நிலத்தின் உரிமையாளர். சுடுகாட்டிற்கு செல்லும் வழியே நாங்கள் தான் ஒதுக்கி கொடுத்துள்ளோம் தற்போது நிலத்திலுள்ள பெயர்களை கால்நடைகள் சேதப்படுத்தி வருகின்றனர். எனவே சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை முள்வேலி அமைத்து சீர் செய்து கொள்ளட்டும் என்றார். இதை அடுத்து அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து அவதியாக சுடுகாட்டிற்கு சடலத்தை கொண்டு செல்ல அனுமதி பெற்று தந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...