Saturday, 7 December 2024

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் திறனறிவுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவுத் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வினை கந்தர்வகோட்டை ஒன்றியத்திலுள்ள அக்கசிப்பட்டி, முள்ளிக்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளிலும், வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இத்தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள்.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் நடைபெற்ற தேர்வைத் தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முள்ளிக்காப்பட்டியில் நடைபெற்ற தேர்வை தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். இதில் கந்தர்வகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாரதிதாசன் தேர்வு மையத்தை பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஆண்டுதோறும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், கணிதம், அறிவியல் தொழில்நுட்பம், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் கணினியில் மதிப்பிடப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் வழங்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் வகையில் துளிர் அறிவியல் திறனறிதல் தேர்வு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 

எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோடி தேர்வாக துளிர் திறனறிதல் தேர்வு உள்ளது. இத்தேர்வில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இளநிலை பிரிவிலும், 9 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உயர்நிலை பிரிவிலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மேல்நிலைப் பிரிவிலும் தேர்வுகள் எழுதினார். இந்த தேர்வானது எழுதும் தேர்வுகள் தேர்விற்கான வினாத்தாள் 100 மதிப்பெண்களைக் கொண்டது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாநில அளவிலான கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். மாதந்தோறும் விஞ்ஞான துளிர் அறிவியல் மாத இதழ் கலந்துகொண்ட அனைத்து  மாணவர்களுக்கும் வழங்கப்படும். அறிவியல் மனப்பான்மையை துளிர் மாத இதழ்கள் வாசிப்பது மூலம் நாம் வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கி வருகிறது. தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. தேர்வு அறை கண்காணிப்பாளராக ஆசிரியை செல்விஜாய், இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் சுமதி, ரஷ்யா, வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீகச் செல்வி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.

இத்தேர்வு குறித்து துளிர் திறனறிதல் தேர்வு எழுதிய முள்ளிக்காப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கூறும் போது இந்த தேர் கேட்கப்பட்ட வினாக்கள் எங்களுக்கு அறிவியல், கணிதம் ஏன்? எதற்கு? எவ்வாறு? என்ற வகையில் சிந்திக்கும் அளவிலான வினாக்கள் இடம்பெற்று இருந்தது. மேலும் விடைகளை ஓ.எம்.ஆர் விடைத்தாளில் குறிக்கும் வகையில் இருந்தது எங்களுக்கு புதுமையான அனுபவமாக வருங்காலங்களில் அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு வழி காட்டும் வகையில் இருந்தது என்றும் மகிழ்ச்சி பொங்க கூறினர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...