நெல்லை மாவட்டம், சமூகரெங்கபுரத்திலுள்ள அற்புதம் சாமுவேல் பப்ளிக் பள்ளியில் பள்ளியின் நிறுவனர் எஸ்.சந்தனமுத்து சிலை திறப்பு விழாவும், அவரது பெயரிலான ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் மு.அப்பாவு கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். நாகர்கோவில் கிறிஸ்தவ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் என்.பிரைட் செல்வகுமார் மற்றும் வேளாங்கண்ணி பள்ளிகள் குழும தாளாளர் எஸ்.ஞானசிகாமணி ஆகியோர் ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் பள்ளி நிர்வாகிகள் எஸ்.செல்வின், எஸ்.தேவராஜ், எஸ்.ஜான்சன், எஸ்.மேரி மற்றும் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment