Monday, 10 February 2025
கள்ளச்சாராய விற்பனையைத் தட்டி கேட்ட முதியவர் வீட்டில் காட்பாடி போலீசார் அத்துமீறி நுழைந்து அதிரடி சோதனை- மிரட்டல் விடுத்த பரிதாபம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்ராவரம் மாரியம்மன் கோயில் பகுதியில் சேட்டு என்பவர் கள்ளச்சாராய விற்பனையை செய்து வந்தார். அத்துடன் மது பாட்டில்களையும் விற்பனை செய்தார். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த மாங்காய் வெங்கடேசன் என்கிற வெங்கடேசன் (60) ஏன் பெண்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் செல்லும் பகுதியில் இப்படி சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்கிறீர்களே, இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்றும் அதற்கு முன்பாக இந்த விற்பனையை இங்கு செய்யாதீர்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சேட்டு மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் காட்பாடி காவல் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த உதவி ஆய்வாளர்கள் மனோகரன் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் தாங்கள் விற்கும் சாராய வியாபாரத்தை தடுக்க பார்க்கின்றனர் என்று தெரிவித்தனர். இதனால் மாமூல் பாதிக்குமே என்று எண்ணிய உதவி ஆய்வாளர்கள் மனோகரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஆத்திரம் அடைந்து காட்பாடி அக்ராவரம் மாரியம்மன் கோயில் தெருவில் இருந்த மாங்காய் வெங்கடேசன் வீட்டில் அத்துமீறி புகுந்து இந்த வீட்டில் கஞ்சா இருக்கிறதா? என்று சோதனையிட வேண்டும் என்று அங்கிருந்த பொருட்களை கலைத்துப் போட்டு சில பொருட்களை உடைத்து விட்டு அங்கிருந்த மாங்காய் வெங்கடேசனின் மகள்களான இரண்டு இளம்பெண்களை அழைத்து உனது தந்தையை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் இல்லையென்றால் அவனை கஞ்சா வழக்கில் கைது செய்து இழுத்துச் சென்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர். இது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாம்பழுக்கு இடையூறு ஏற்படுத்திய மாங்காய் வெங்கடேசன் வீட்டில் அத்துமீறி புகுந்து சோதனை என்ற பெயரில் அங்கிருந்த பெண்களை மிரட்டி உருட்டி விட்டுச் சென்ற சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் வேலூர் சரக டிஐஜி தேவராணி ஆகியோரது செவிகளுக்கு எட்டியதா? இல்லையா? என்பது இதுநாள் வரை தெரியவில்லை. தனிப்பிரிவு போலீசார் இந்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு தெரிவித்தார்களா? இல்லையா? என்பதும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் உண்மை, நேர்மை என்று இருப்பவர்கள் அநியாயத்தை தட்டி கேட்பவர்கள் இப்படி விரட்டப்படுவது சமுதாயத்தில் புரையோடி ஒரு நிகழ்ச்சியாக உள்ளதற்கு இந்த மாங்காய் வெங்கடேசனுடைய கதையும் ஒன்றாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காவல்துறை என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று
தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment