Friday, 14 February 2025

உயர் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்; விஜிலென்ஸ் போலீசாரை அனுப்பிய நீதிமன்றம்!

பேராவூரணி பேரூராட்சியில் தி.மு.க பேரூராட்சி தலைவர், அவரது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் முறைகேடு செய்திருப்பதாக தி.மு.க-வைச் சேர்ந்த நபர் தொடர்ந்த வழக்கில், முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

பேராவூரணி நகர தி.மு.க செயலாளராக இருப்பவர் சேகர். இவரது மனைவி சாந்தி, பேராவூரணி பேரூராட்சித் தலைவராக இருக்கிறார். சாந்தியின் மாமனார் செல்வராஜ் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க-வின் முன்னாள் துணை செயலாளர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து விதிகளை மீறி பேரூராட்சியில் முறைகேடு செய்திருப்பதாக தி.மு.க-வைச் சேர்ந்த முதல்நிலை அரசு ஒப்பந்ததாரரான செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அப்போதைய தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, ஐஏஎஸ்., ஆய்வு செய்து முறைகேடு நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக வெளியான தகவல், தி.மு.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர்,

இது குறித்து செந்தில்குமார் கூறுகையில், ``பழைய பேராவூரணி, தெப்பக்குளத் தெரு, மேலத்தெரு ஆகிய இடங்களில் அமைக்கபட்ட பேவர் ப்ளாக் சாலை, தார் சாலை அமைத்தல், சுகாதார வளாகம் கட்டுதல், பாலம் கட்டுதல், வார்டுகளில் பெட்மிக்ஸ் மண் அடிக்காமலேயே அடித்தது பல பணிகளில் பேராவூரணி பேரூராட்சியில் ஊழல் நடந்துள்ளது. பேரூராட்சி சேர்மன் சாந்தி சேகர், அவர் மாமனார் செல்வராஜ் தலைமையில் பேரூராட்சியில் பல கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்கு முன்னாள் செயல் அலுவலர் பழனிவேலும் உடந்தையாக இருந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்குத் தொடர்ந்த செந்தில்குமார்,

இது குறித்து நான், உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். எனது மனுவை விசாரித்த நீதிபதி, ஊழல் புகார் குறித்து விசாரணை செய்து 12 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசு முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் சீர்திருத்தத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலாவிற்கு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தினார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள்கள் பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி இயக்குநரக அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதன் அறிக்கையை 29.01.2024 அன்று பேரூராட்சி இயக்குநர், கார்த்திகேயனிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் போரூரட்சி சேர்மன் உள்ளிட்ட யார் மீதும் எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. அத்துடன் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் இல்லை. இதைத் தொடர்ந்து நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தேன். அதன் பிறகு பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா,ஐஏஎஸ்., ஆய்வறிக்கையை 27.06.2024-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பேரூராட்சி பெண் தலைவரின் கணவரும், மாமனாரும் செயல்பட்டு முறைகேடு செய்திருப்பது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வு அறிக்கையை நான் நீதிமன்றத்தின் பெற்றதன் மூலம் முறைகேடு நடந்திருப்பது உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது. தொடர்ந்து ஊழல் நடைபெறுவதாக நான் குற்றம்சாட்டி வந்த நிலையில் அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் நிலை ஏற்பட நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். தற்போது போரூராட்சி இயக்குநரே ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு இதில் தலையிட்டு பேரூராட்சி தலைவர் சாந்தி, அவரது கணவர் சேகர் மற்றும் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இதை செய்யும் என நம்புகிறேன் இன்று தெரிவித்துள்ளார்.
பேராவூரணி பேரூராட்சி தலைவரின் மாமனார் செல்வராஜ்,

இது குறித்து செல்வராஜ் கூறியதாவது:-``முறைப்படி, விதிப்படி அனைத்து பணிகளும் செய்யபட்டுள்ளது. இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து செந்தில்குமார் உள்கட்சி பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு அவதூறுகளை பரப்பி வருகிறார். பேரூராட்சி தலைவரும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதால் உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குநரிடத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் பேரூராட்சிகளின் சீர்திருத்தத்துறை நிர்வாகத்துறை உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதுடன் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலக அலுவலர்கள் தஞ்சாவூர் மாவட்டம், மயிலாடுதுறை பேரூராட்சிகளின் மாவட்டங்களுக்குட்பட்ட பேராவூரணி பேரூராட்சியில் ஆய்வு செய்த போது ஒப்பந்தங்கள் போடப்பட்டு சாலை பணிகள் செய்யாமலேயே பணிகள் முடிவடைந்ததாக அப்போதை செயல் அலுவலர் பழனிவேல் உதவியுடன் பல லட்சங்களை திமுக பேரூராட்சி தலைவர் சாந்தியின் கணவரும் திமுக நகரச் செயலாளருமான சேகர், மற்றும் சாந்தியின் மாமனார் திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் எடுத்திருப்பதும், ஒப்பந்தம் எடுத்தவர் ஒருவர் பெயர் இருக்கும் போதும் பணத்தை செல்வராஜ் பெயருக்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. மேலும் செல்வராஜ் வீட்டில் உள்ளவர்கள் பெயர்களுக்கு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது எனப் பல முறைகேடுகள் ஆய்வில் தெரிய வந்தது. ஆனால் ஆய்விற்கு பிறகும் நீதிமன்ற உத்தரவுப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான் பேராவூரணி பொன்காடு நீலகண்டன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்று அதே நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் வியாழக்கிழமையன்று பேராவூரணி வந்த தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையிலான போலீசார், புகார்தாரரான பொன்காடு நீலகண்டனிடம் விசாரணை செய்து தொடர்ந்து பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்திலும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் புகாரில் கூறப்பட்டுள்ள சாலைகள், பணிகள் நடந்துள்ளதா? என்பதையும் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவரும் பட்சத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையே வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் இந்த முறைகேடுகளில் சம்மந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர்கள், மற்றும் ஒப்பந்தக்காரர், ஒப்பந்தமே எடுக்காமல் முறைகேடாக பணம் பெற்றவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதனால் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...