விஜய்க்கு Y" பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை அமைப்புகள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில் தற்போது, 11 பேர் பிஸ்டல் மற்றும் ஸ்டன் கன்னுடன் சுழற்சி முறையில் விஜய்க்கு பாதுகாப்பு தரவுள்ளனர். X, Y, Z, Y+, Z+ மற்றும் SPG பிரிவு பாதுகாப்பு பிரிவுகளில் பாதுகாப்பு பெரும் பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து பார்க்கலாம்..
X பிரிவு: X பிரிவில் 2 பர்சனல் செக்யூரிட்டி ஆபீசர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்களில் நீதிபதிகள், எம்பிக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் (நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில்) உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
ஒய் பிரிவு பாதுகாப்பை பொறுத்தவரை காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது விஜய் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Y+ பாதுகாப்பு: Y + பாதுகாப்பை பொறுத்தவரை இந்திய அளவில் ஷாருக் கான், சல்மான் கான், கங்கனா ரனாவத், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் பெறுகின்றனர்.
Z பிரிவு: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகண்ட்டின் புஷ்கர் சிங் தாமி, பாபா ராம்தேவ், அமீர் கான் உள்ளிட்டோர் இசட் பிரிவு பாதுகாப்பை பெற்றுள்ளனர்.
Z+ பிரிவு: Z+ பாதுகாப்பை பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு படை எனப்படும் என்எஸ்ஜி குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
SPG பாதுகாப்பு: இந்தியாவைப் பொறுத்தவரை உச்சபட்ச பாதுகாப்பு என்றால் அது SPG தான். தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ராகுல் காந்தி பிரியங்கா காந்திக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு அது நீக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படும் படி விதிகள் திருத்தப்பட்டுள்ளது.
இவர்களைத் தெடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு Y" பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது உள்துறை அமைச்சகம்.
தமிழ் திரை உலகில் உச்சபட்ச நட்சத்திரத்தில் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பார்கள். இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது எப்படி.. மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது. இதன்த் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்த 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நம்மிடம் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:-
1. விஜய் இந்தியாவிலேயே அதிக வரி கட்டும் தனி நபர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இப்படிப்பட்டவருக்கு பாதுகாப்பு அவசியம்.
2. விஜயின் அரசியலை அமித் ஷா கவனித்து வருகிறார். விஜய் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றையும் அவர் கவனித்துக்கொண்டு இருக்கிறார்.
3. கொள்கை ரீதியாக அவர் பாஜகவை எதிர்த்தாலும் ஆளும் கட்சி திமுகவை அவர் கடுமையாக எதிர்ப்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனித்துள்ளார்.
4. விஜயின் செயல்பாடுகளை கவனித்த டெல்லி.. உங்களுக்கு பாதுகாப்பு அவசியம். நீங்கள் இனி நடிகர் மட்டுமல்ல அரசியல்வாதியும்தான்.. அதனால் தனிப்பட்ட பாதுகாப்பு அவசியம் என்று அவரிடம் பேசியுள்ளது.
5. டெல்லி சார்பாக முக்கியமான ஒருவர் அவரிடம் பேசிய பின்பே 'Y' பிரிவு பாதுகாப்பு கொடுப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது.
6. கொஞ்சம் பாஜகவிற்கு இதன் மூலம் அவர் நெருக்கம் ஆவார்.. எதிர்காலத்தில் பயன்படும் என்று பாஜக போட்ட ஸ்கெட்ச்சாகவும் இது இருக்கலாம் என்கிறார்கள்.
7. சமீபத்தில் விஜய் மேற்கொள்ள போகும் பயணங்களில் முட்டை அடிக்க வேண்டும் என்று சில நெட்டிசன்கள் ட்விட்டரில் நடந்த குழு உரையாடல்களில் பேசியது டிரெண்டான நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் (VVIPs, VIPs) பாதுகாப்புக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு பாதுகாப்பு அளவுகோள்களை வைத்து உள்ளது. அதன்படி பாதுகாப்பு தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு X, Y, Z, Z+ போன்ற பாதுகாப்பு பிரிவுகள் உள்ளது.
1. X கேட்கரி (X Category Security)
இது மிகக் குறைந்தபட்ச பாதுகாப்பு அளவாகும்.
பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் (ஒரு முறை ஒருவர்) வழங்கப்படும்.
காவல்துறை அல்லது பிற பாதுகாப்பு அமைப்புகளால் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
2. Y கேட்கரி (Y Category Security)
இது X பாதுகாப்பை விட சிறிதளவு உயர்ந்தது.
5 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்குவர் (2 நபர்கள் குடியிருப்பு பாதுகாப்புக்கு, 3 நபர்கள் கூடவே இருப்பார்கள்).
மாநில போலீஸ் அல்லது மத்திய பாதுகாப்பு படைகள் இதை வழங்கலாம்.
3. Z கேட்கரி (Z Category Security)
இது முக்கியமான அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோருக்கு வழங்கப்படும்.
22 பாதுகாப்பு வீரர்கள் இதில் இருப்பர். (பொதுவாக CRPF அல்லது NSG வீரர்கள்)
முழுநேர ஆயுதத்துடன் பாதுகாப்பு வழங்கப்படும்.
ஒரு எஸ்கார்ட் வாகனம் (Escort Vehicle) அடங்கும்.
4. Z+ கேட்கரி (Z+ Category Security)
மிக உயர்ந்த நிலை பாதுகாப்பு. முன்னாள் பிரதமர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய அமைச்சர்கள் போன்றோருக்கு வழங்கப்படும்.
55 பாதுகாப்பு வீரர்கள் இதில் இருப்பர் (முக்கியமாக NSG கமாண்டோக்கள்).
பல எஸ்கார்ட் வாகனங்களும் சிறப்பு பாதுகாப்பு ஆயுதங்களும் வழங்கப்படும்.
5. SPG பாதுகாப்பு (SPG Security)
இது பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படும்.
Special Protection Group (SPG) இந்த பாதுகாப்பை வழங்குகிறது.
முன்னாள் பிரதமர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் மட்டும் இது வழங்கப்படும்.
இந்த பாதுகாப்பு நிலைகள் ஏற்கனவே இருக்கும் மிரட்டல் நிலை, புலனாய்வு தகவல்கள், அரசியல் முக்கியத்துவம் ஆகியவை அடிப்படையில் வழங்கப்படும்.
No comments:
Post a Comment