வேலூர் மாவட்டம், கடந்த 2021- ம் ஆண்டு காட்பாடியில் பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பாபு ஷேக் (வயது 55) என்பவர் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளார்.
இந்நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 15-ஆம் தேதி சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அப்படியிருக்க, அதிகாலை மூன்று மணிக்கு அவர் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிவிட்டான். பொழுது விடிந்து இந்த விஷயம் பின்னரே தெரிய வந்திருக்கிறது. பின்னர் காவல்துறையினர் தப்பியோடி கைதியை வலை வீசி தேடி வருகின்றனர். குறட்டைவிட்டு தூங்கிய போலீசாருக்கு தூக்கம் போய்விட்டது.
No comments:
Post a Comment