Thursday, 20 February 2025
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வனத்துறை சோதனைச் சாவடியில் வசூல் வேட்டை தீவிரம்: கனரக வாகன ஓட்டிகள் கலக்கம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடியில் சுழற்சி முறையில் 8 மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் பணிபுரிகின்றனர். இவர்களில் யார் பணிக்கு வந்தாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இவர்கள் செய்வதில்லை. இதற்கு மாறாக அந்த வாகனங்களின் ஓட்டுனர்களிடம் தலா ரூபாய் 50 முதல் 100 வரை வசூல் செய்கின்றனர். இந்த கட்டாய வசூல் எதற்கு என்று தெரியவில்லை. வாங்கும் பணத்திற்கு எந்தவித ரசீதும் உரிய வாறு அவர்களிடம் வழங்குவது இல்லை. அப்போது இந்த பணம் யாருக்கு செல்கிறது என்றால் யார் பணியில் இருக்கிறார்களோ அந்த 8 மணி நேரத்திற்கு சொந்தக்காரர்களின் பாக்கெட்டை நிரப்புகிறது என்றே சொல்லலாம். இப்படி ஒரு அவல நிலை தொடர்ந்து பல ஆண்டுகளாக வாழையடி வாழையாக இருந்து வருகிறது. இது மிகவும் வெட்கக்கேடானது, வருத்தத்திற்குரியது என்றே சொல்லலாம். இப்படி எதற்கு பணம் வாங்குகின்றனர் என்று தெரியாமல் வனத்துறையில் பணியாற்றும் நபர்கள் பணத்தை வசூல் செய்கின்றனர். தாங்கள் எதற்கு பணம் கொடுக்கிறோம் என்று தெரியாமலேயே கனரக வாகன ஓட்டிகள் பணத்தை இழந்து விட்டுச் செல்கின்றனர். இது ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளியை வேலூர் மாவட்ட நிர்வாகமோ அல்லது மாவட்ட வனத் துறையோ ஏற்படுத்த வேண்டும் என்பது கனரக வாகன ஓட்டுனர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி கொடுத்து வைத்தது போல பணம் பறிப்பது எதனால் என்பதற்கு இதுநாள் வரை யாரும் விளக்கம் தரவில்லை. இது ஒரு சிதம்பர ரகசியமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று
தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment